தற்பொழுது விற்பனையில் உள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R பைக்கினை விட மேம்பட்ட நவீனத்துவமான டிசைன் வடிவமைப்பினை பெற்ற எக்ஸ்ட்ரீம் 160R பைக் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட வருவதனால் அடுத்த சில மாதங்களுக்கு பிற்கு விற்பனைக்கு வரக்கூடும் என உறுதியாகியுள்ளது.
இந்த வடிமைப்பினை பின்பற்றி எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கும் மேம்படுத்த வாய்ப்புகள் உள்ளது. இதுதவிர ஹீரோ நிறுவனம் கரிஸ்மா XMR பைக்கினை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டத்தை மேற்கொண்டுள்ளது.
புதிய தலைமுறை எக்ஸ்ட்ரீம் 160R சில புதிய வண்ண விருப்பங்களுடன் டிசைன் வடிவத்தில் சில மேம்பாடுகளை பெற வாய்ப்புள்ளது. இந்த பைக்கில் ஏற்கனவே சிறப்பான ஸ்போர்ட்டிவ் அம்சத்தை பெற்றுள்ளதால், சிறிய மாற்றங்களுடன் சில பிரீமியம் வசதிகளை எக்ஸ்ட்ரீம் 160R பெறக்கூடும்.
இதனை அடிப்படையாக கொண்டு சற்று பவர்ஃபுல்லான 200சிசி என்ஜின் பெற்ற எக்ஸ்ட்ரீம் 200R மாடல் விற்பனைக்கு வரவுள்ளது.
எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கில் புதிய மேம்பட்ட 163சிசி, ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்ட அதிகபட்சமாக 15.2 PS பவர், 14 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய 160R சிறப்பான மைலேஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
160cc சந்தையில் உள்ள பல்சர் என்160 மற்றும் அப்பாச்சி 160 பைக்குகளை எதிர்கொள்ளும் வகையில் விளங்குகின்றது. மேலும் 200சிசி சந்தையில் உள்ள எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கும் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரக்கூடும்.