Automobile Tamilan

ரூ.1.99 லட்சத்தில் புதிய ஜாவா 42 FJ வெளியானது

Jawa 42 fj

மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் செயல்படும் ஜாவா யெஸ்டி நிறுவனம் புதிய 42 FJ நியோ கிளாசிக் ஸ்டைல் மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு ரூபாய் 1,99,142 விலையில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சமீபத்தில் 2024 ஜாவா 42 மாடல் விற்பனைக்கு J-PANTHER என்ஜின் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் புதிதாக வந்துள்ள மாடல் Alpha 2 எனப்படுகின்ற 334cc இன்ஜின் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய 42 மாடலை விட மிக நேர்த்தியான ஸ்டைலிஷ் அம்சங்கள் சேர்க்கப்பட்டு மிகவும் இளைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையிலான அம்சங்களை புதிய 42 எஃப்ஜே கொண்டிருக்கின்றது. இதில் FJ என்பது ஜாவா நிறுவனர் František Janeček அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜாவா 350 பைக்கில் உள்ள அதே என்ஜினை பகிர்ந்துகொள்ளும் 42 FJ பைக்கில் 334cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 22.5 hp பவர் மற்றும் 28.1 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

டீப் பிளாக் மேட் பிளாக் கிளாட், டீப் பிளாக் மேட் ரெட் கிளாட், மிஸ்டிக்யூ காப்பர், அரோரா க்ரீன் மேட், மற்றும் காஸ்மோ ப்ளூ மேட் என ஐந்து நிறங்களை பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஏற்ற வகையில் பாடி கிராபிக்ஸ் மற்றும் ஜாவா, 42 பிராண்ட் பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

மற்றபடி,42 பைக்கில் இருந்து பெறப்பட்ட டபுள் கார்டிள் ஃபிரேம் கொண்டு வலிமைக்கப்பட்டுள்ள இந்த மாடலில் இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக் ஆனது கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர் முறையானது கொடுக்கப்பட்டு உள்ளது.

ஜாவா 42 எஃப்ஜே விலை பட்டியல்

 

 

Exit mobile version