Automobile Tamilan

புதிய கிளாசிக் 650 பைக்கினை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

Royal Enfield classic 650 bike

கிளாசிக் 350 மாடலை அடிப்படையாக கொண்ட 650சிசி எஞ்சின் பெற்ற ஆறாவது மாடலாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ட்வீன் மாடலை பிரசத்தி பெற்ற EICMA 2024 கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ள நிலையில் விற்பனைக்கு மோட்டோவெர்ஸ் 2024 அரங்கில் வெளியிடப்படலாம்.

பிரபலமாக விளங்குகின்ற கிளாசிக் 350 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கிளாசிக் 650 மாடல் ஏற்கனவே விற்பனையிலிருந்து கிளாசிக் 500 மாடலுக்கு மாற்றாகவும் புதியதொரு தொடக்கத்தை கிளாசிக் வரிசையில் ஏற்படுத்தும் வகையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

டீல், வல்லம் சிவப்பு, ப்ருண்டிங் தோர்ப் புளூ மற்றும் பிளாக் குரோம் உள்ளிட்ட நான்கு வண்ணங்களை பெறுகின்ற பைக்கில் 648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன்,  4000 RPMல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய கிளாசிக் 350 அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாடலில் வழக்கமான வட்ட வடிவ ஹெட்லைட் அமைப்பினை வழங்கி மேற்பகுதியில் டைகர் லேம்ப் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மிக அகலமான ஃபெண்டர் மற்றும் நேர்த்தியான வண்ணங்கள் கொடுக்கப்பட்டு செமி டிஜிட்டல் ஆனது கொடுக்கப்பட்டு கிளாசிக் 350 மாடல் போலவே அமைந்திருக்கின்றது. மற்றபடி யூஎஸ்பி சார்ஜ் போர்ட், அட்ஜஸ்டபிள்  பிரேக், கிளட்ச் லிவர்  போன்ற வசதிகள் எல்லாம் உள்ளன.

MRF Nylohigh டயர் முன்புறத்தில் 100/90-19 மற்றும் பின்புறத்தில் 140/70-R18 பெற்று முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்திலும் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. முன்புறத்தில் 43 மிமீ டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுடன் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது.

14.8 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்று 800 மிமீ உயரம் இருக்கை கொண்டுள்ள கிளாசிக் 650 மாடலின் எடை 243 கிலோ ஆகும். எனவே, மற்ற என்ஃபீல்டு மாடல்களை விட எடை அதிகமானதாக விளங்குகின்றது.

Exit mobile version