Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய அட்வென்ச்சர் சாகாப்தத்தை உருவாக்குமா.! அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300

by MR.Durai
19 October 2025, 9:02 am
in Bike News
0
ShareTweetSend

new tvs apache rtx adventure bike

டிவிஎஸ் மோட்டார் 125சிசி சந்தையில் ரைடர் 125, ஸ்கூட்டர் பிரிவில் பூட்ஸ்பேஸ் கொண்ட ஜூபிடர், 150சிசியில் புதிய ஸ்போர்ட்டிவ் என்டார்க் 150 என பல மாறுபட்ட தனித்துவமான அடையாளங்களை கொண்டு வந்த நிலையில் இந்நிறுவனத்தின், அடுத்த முயற்சி ப்யூர் ஆஃப் ரோடர் அல்ல ஆனால் அட்வென்ச்சர் டூரிங் அனுபவத்தை வழங்க அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் வெளியாகியுள்ளது.

அப்பாச்சி RTX போட்டியாளர்கள்

இந்திய சந்தையில் சில வருடங்களாக அட்வென்ச்சர் ரக மாடல்களுக்கு ஹீரோ இம்பல்ஸ் துவங்கி ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், ஹீரோ எக்ஸ்பல்ஸ், கவாஸாகி KLX, கேடிஎம் 390 அட்வென்ச்சர், யெஸ்டி அட்வென்ச்சர் ஆகியவற்றுடன் டூரிங் பயணத்துக்கான சுசூகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் போன்றவை ரூ.1.70 லட்சம் முதல் ரூ.4 லட்சத்திற்குள் அமைந்துள்ளது.

லேசான ஆஃப் ரோடுக்கு ஏற்ற அப்பாச்சி ஆர்டிஎக்ஸிற்கு சவாலினை என்ஜின் cc அடிப்படையில் நேரடியான மாடல்கள் இல்லையன்றாலும் விலையின் அடிப்படையில் சுசூகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் 250, கேடிஎம் 250 அட்வென்ச்சர் போன்றவற்றுடன் மற்ற மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.

Apache RTX சிறப்புகள்

300cc பிரிவில் வந்துள்ள அட்வென்ச்சர் டூரிங் பயணத்துக்கு நீண்ட தொலைவுக்கு ஏற்ற வகையிலான வடிவமைப்பினை கொண்டிருந்தாலும் இருக்கை உயரம்  835 மிமீ ஆனது சற்று குறைந்த உயரம் கொண்டவர்களுக்கு சிரமத்தை எதிர்கொள்ளுவார்கள், ஆனால் பைக்கினை கையாளுவது எளிமையாக சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்குவது கவனத்தை ஈர்க்க முக்கிய காரணமாகும்.

என்ஜினை டிவிஎஸ் புதிதாக உருவாக்கியுள்ள நிலையில், ஆர்டிஎக்ஸ்-டி4 ஆனது மிக நீண்ட ஹைவே பயணங்களில் என்ஜினின் வெப்பத்தை இலகுவாக கையாளுவதற்கு ஏற்ற வகையிலான வடிவமைப்பினை பெற்று மாடரன் டிரென்டான ரைட் பை வயருடன் கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், ரைடிங் மோடுகளுக்கு ஏற்ப திராட்டிள் ரெஸ்பான்ஸை வெளிப்படுத்துவதுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் போன்றவை செயல்படுவது கூடுதலாக இந்த அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் பைக்கின் மீதான ஈர்ப்பினை ஏற்படுத்துகின்றது. பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக உள்ள நிலையில் மைலேஜ் பற்றி பெரிதாக எதிர்பார்க்க முடியவில்லை.

tvs apache rtx cluster

அதிக சிரத்தை இல்லாத ஆஃப் ரோடுகளுக்கு ஏற்ற சஸ்பென்ஷனாக 180 மிமீ இரு புறத்திலும் பயணிப்பதுடன் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் கொடுக்கப்பட்டு, சுவிட்சபிள் ஏபிஎஸ் உடன் சிறப்பான ஆஃப் ரோடு டயர்களும் உள்ளது. இந்த பைக்கின் முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் 17அங்குல வீல் பெற்றதாக அமைந்துள்ளது.

கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட 5 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டரை கொடுத்திருப்பதுடன் பல்வேறு நவீன அம்சங்கள் மற்றும் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உள்ளிட்ட பலவற்றை பெற்றுள்ளது.

பேஸ் வேரியண்டில் அனைத்து வசதிகளும் உள்ள நிலையில், டாப் வேரியண்டில் கூடுதலாக சிரத்தை இல்லாத கியர் ஷி்ப்ட் செய்ய பை டைரக்‌ஷனல் வசதி, டாப் பேனியர் வைப்பதற்கான ஆப்ஷனல் ஆக்செரீஸ் உள்ளது. மற்றபடி BTO வேரியண்டில் தேவைக்கு ஏற்ப அட்ஜெட் செய்யும் சஸ்பென்ஷன், TPMS உள்ளது.

இது ரொம்ப சாகசங்களுக்கான ஆஃப் ரோடு பைக் அல்ல ஆனால் லேசான அட்வென்ச்சருக்கும் நீண்ட தொலைவுக்கான டூரிங்கிற்கும் ஏற்றதாக விளங்கும் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் விலை ரூ.1.99 லட்சம் முதல் ரூ.2.34 லட்சம் வரை கிடைக்கின்ற நிலையில் போட்டியாளர்களில் சுசூகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் நேரடி சவாலினை விடுக்கின்றது.

new tvs apache rtx

Related Motor News

EICMA 2025ல் டிவிஎஸ் Tangent RR மற்றும் RTR ஹைப்பர்ஸ்டன்ட் கான்செப்ட் அறிமுகம்

டிவிஎஸ் அப்பாச்சி RTX ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

₹ 1.99 லட்சத்தில் டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி RTX அட்வென்ச்சர் வெளியானது

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

அட்வென்ச்சர் டூரிங் டிவிஎஸ் RTX300 ரூ.2 லட்சத்தில் வருமா.?

டிவிஎஸ் அப்பாச்சி RTX 300 அட்வென்ச்சர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை.!

Tags: TVS Apache RTX
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Harley-Davidson X440 T

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

tvs Ronin Agonda Edition

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

சுசூகி ஹயபுசா ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரானிக் அம்சங்களுடன் அறிமுகம்!

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan