125சிசி சந்தையில் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்று பிரபலமாக உள்ள டிவிஎஸ் மோட்டாரின் ரைடர் 125யில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற வேரியண்ட் மற்றும் கூடுதலாக சில நிறங்களை பெற்றதாக விற்பனைக்கு அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட உள்ளது.
TVS Raider 125 ABS launch soon
ஏற்கனவே இந்த சந்தையில் எக்ஸ்ட்ரீம் 125ஆர், பல்சர் என்125, மற்றும் சிபி ஹார்னெட் 125ஆர் ஆகிய மாடல்களில் சிங்கிள் சேல் ஏபிஎஸ் பெற்றுள்ள நிலையில், கூடுதலாக இந்த பிரவில் ரைடர் 125யிலும் ஏபிஎஸ் கொடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் டீலர்களுக்கு வந்துள்ள மாடல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆனால் கவனிக்கவேண்டிய முக்கிய அம்சம் என்னெவென்றால் போட்டியாளர்கள் அனைவரும் பின்புறத்தில் டிரம் ஆப்ஷனை மட்டும் வழங்கி வரும் நிலையில் ரைடரின் பின் டயரிலும் டிஸ்க் உள்ளது மிகப்பெரிய பாதுகாப்பு சார்ந்த மேம்பாடாக கருதப்படுகின்றது.
மற்ற மாற்றங்களை பொறுத்தவரை டயரின் அளவுகளில் இனி 90/90-17 முன்புறத்தில் மற்றும் 110/80-17 பின்புறத்தில் வழங்கப்படுவதுடன், மாறுபட்ட பாடி கிராபிக்ஸ், வழக்கமான எல்சிடி கிளஸ்ட்டருடன் கிடைக்க உள்ளது.
தற்பொழுது சந்தையில் உள்ள டிவிஎஸ் ரைடர் 125யின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.83,800 முதல் ரூ.97,200 வரை அமைந்துள்ளதால் ஏபிஎஸ் பெற்ற வேரியண்ட் ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை கூடுதலாக அமையலாம்.
image source – Dev Mtr