ஓலா எலக்ட்ரிக்கின் கனவு மாடலாக உருவாக்கப்பட்டு வரும் டைமண்ட்ஹெட் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் விலை ரூ.5 லட்சத்திற்குள் அமைவதுடன் இதன் பாகங்கள் டைட்டானியம், ஏரோபிளேன்களில் உள்ள இலகு எடை உள்ள மெக்னீசியம் மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்களை கொண்டு தயாரிக்கப்பட உள்ளதை 2025 சங்கல்பில் அறிவித்துள்ளது.
2027ஆம் ஆண்டின் மத்தியில் சந்தைக்கு அறிமுகம் செயப்பட உள்ள டைமன்ட்ஹெட்டில் இந்நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான 4680 செல்கள் பயன்படுத்தப்பட்ட பேட்டரியை பெற்று 0-100கிமீ வேகத்தை 2 விநாடிகளில் எட்டுவதுடன் ஹப் சென்ட்டர்டு ஸ்டீயரிங், ரைடிங்கிற்கு ஏற்ப ஹேண்டில்பார் மற்றும் ஃபூட் பெக்குகளை மாற்றிக் கொள்ளலாம்.
மிக வேகமான சார்ஜிங் வசதியுடன் ADAS பாதுகாப்புடன் ஏக்டிவ் சஸ்பென்ஷன் ஏரோடைனமிக்ஸ் சார்ந்த செயல்பாடுகளுடன் 17 அங்குல வீல் பெற்று முன்புறத்தில் இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காட்சிப்படுத்தப்பட்ட டைமண்ட்ஹெட் தற்பொழுது உற்பத்திக்கு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் மிகச் சிறந்த பெர்ஃபாமென்ஸ் மாடலாக இருக்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.
விற்பனைக்கு 2027ல் வரவுள்ள இந்த மாடலின் விலை ரூ.5 லட்சத்திற்குள் கொண்டு வரவுள்ளது.