Categories: Bike News

ஓலா எலக்ட்ரிக் பாரத் இவி ஃபெஸ்ட் சிறப்பு சலுகைகள்

ola-s1x vs s1 air electric scooter

நாட்டின் முன்னணி மின்சார இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஓலா எலக்ட்ரிக் பண்டிகை காலத்தை முன்னிட்டு ‘Bharat EV Fest’ என்ற பெயரில் புதிய ஸ்கூட்டர் வாங்குபவர்கள் அதிகபட்சமாக ரூ.24,500 வரை சிறப்பு சலுகை மற்றும் எஸ்1 புரோ வாடிக்கையாளர்களுக்கு 5 ஆண்டுகால பேட்டரி வாரண்டி வழங்குகின்றது.

ஓலா நிறுவனம், S1X, S1X+, S1 air,  S1 Pro (2nd Gen) ஆகிய ஸ்கூட்டர்கள் ரூ.90,000 முதல் ரூ.1.48 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை அமைந்துள்ளது.

Ola Bharat EV Fest

இந்தியாவில் மின்சார வாகனங்கள் வாங்குபவர்களை ஊக்குவிக்கும் நோக்கில். இந்த விழா வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் பேட்டரி உத்தரவாத திட்டங்கள் உட்பட பல நன்மைகளை வழங்குகிறது. ஓலாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் வாங்குபவர்கள் ரூ.24,500 வரை சேமிப்பு மற்றும் 5 வருட பேட்டரி வாரண்டி சலுகையை S1 Pro (2nd Gen) ஸ்கூட்டருக்கு வழங்கப்பட உள்ளது.

ICE-to-EV திட்டத்தின் மூலம் ஓலா நிறுவனத்தின் 1000 சர்வீஸ் மையங்களில் பெட்ரோலில் இயங்கும் இரு சக்கர வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்து விட்டு புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு ரூ.10,000 வரை கூடுதல் போனஸ் வழங்குகின்றது.

தினமும் ஓலா மையங்களில் டெஸ்ட் டிரைவ் செய்யும் வாடிக்கையாளர்களில் ஒருவருக்கு புதிய S1 Pro (2வது தலைமுறை) மீதான தள்ளுபடி மற்றும் S1X+ ஸ்கூட்டரை தினமும் வெல்லும் வாய்ப்பைப் பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு EMIகளில் ரூ.7,500 வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

இதுபோன்ற பல்வேறு சலுகைகளை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு சலுகை வழங்குகின்றது.