ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தொடர்ந்து நவீன அம்சங்களை வழங்கி வரும் நிலையில் S1 Pro ஸ்போர்ட் மின் ஸ்கூட்டரில் ADAS உடன் அறிமுக சலுகை விலை ரூ.1,49,999 (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டு மணிக்கு 152 கிமீ வேகத்துடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் 320 கிமீ வெளிப்படுத்தும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் அரிய வகை காந்தம் பயன்படுத்துவதற்கு மாற்றாக Ferrite மோட்டார் கொண்டு தயாரிக்க துவங்கியுள்ளதால், சீனாவின் தடை எவ்விதத்திலும் பாதிக்காது வகையில் அமைந்துள்ளது.
OLA S1 Pro Sport வசதிகள்
எஸ்1 புரோ ஸ்போர்ட்டில் பாரத்செல் 4680 என இந்நிறுவனத்தின் சொந்த தயாரிப்பில் உருவான செல்கள் பெற்ற 5.2Kwh பேட்டரி ஆப்ஷன் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 320 கிமீ IDC சான்றிதழ் பெற்று 13KW Ferrite மோட்டாரை பொருத்தப்பட்டு பவர் 16Kw மற்றும் 71 Nm டார்க் வழங்கும் நிலையில் மணிக்கு அதிகபட்ச வேகம் 152 கிமீ ஆகவும், 0-40 கிமீ வேகத்தை எட்ட 2 விநாடிகள் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADAS அமைப்பின் மூலம் மோதல் தடுக்கும் எச்சரிக்கை, பிளைன்ட் ஸ்பாட் எச்சரிக்கை, அடாப்ட்டிவ் க்ரூஸ் கட்டுப்பாடு, போக்குவரத்து அங்கீகாரம் மற்றும் வேக எச்சரிக்கை வழங்குகின்றது.
இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் கேமரா வழங்கப்பட்டு பதிவு செய்வதற்கான டேஷ்கேமாக மட்டுமல்லாமல், பயணங்கள் மற்றும் திருட்டு எச்சரிக்கைகளை கேமரா பிடிப்புடன் பதிவு செய்யவும் பயன்படுகிறது.
ஓலா எஸ்1 ப்ரோ ஸ்போர்ட் ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டு பிரேக்கிங் அமைப்பில் இருபக்கமும் டிஸ்க் பிரேக் கொண்டுள்ள நிலையி்ல், 14 அங்குல முன் அலாய் வீலுடன் அகலமான டயரை பெற்று இருக்கை உயரம் 791 மிமீ மற்றும் இருக்கைக்கு அடியில் ஸ்டோரேஜ் 34 லிட்டர் ஆக உள்ளது.
MoveOS 6 பயன்படுத்தப்பட உள்ள இந்த ஸ்கூட்டருக்கு தற்பொழுது முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் கட்டணமாக ரூ.999 வசூலிக்கப்படும் நிலையில் டெலிவரி ஜனவரி 2026 முதல் நடைபெற உள்ளது.