இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கிற்கு மீண்டும் முன்பதிவை ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் துவங்கியுள்ளது.
ரிவோல்ட் மோட்டார்ஸ் RV400 எலக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவுகளை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது. இந்த பைக்கின் முன்பதிவு செய்ய கட்டணமாக ரூ. 2,499 வசூலிக்கப்படுகின்றது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் மார்ச் 31, 2023 முன்பாக டெலிவரிகளைப் பெறுவார்கள் என இந்நிறுவனம் கூறியுள்ளது. ரிவோல்ட் நிறுவனத்தை RattanIndia Enterprises நிறுவனத்தால் முழுமையாக கையகப்படுத்தப்பட்டது.
45 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடில் 156 கிமீ பயணம், 65 கிமீ வேகத்தில் பயணிக்க நார்மல் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ பயணம், மற்றும் 80 கிமீ வேகத்தில் பயணிக்க ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 80 கிமீ பயணிக்க என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது.
ஆர்வி400 பைக்கில் உள்ள ஈக்கோ மோடில் பேட்டரி ஆனது முழுமையான சிங்கிள் சார்ஜின் மூலம் அதிகபட்சமாக 156 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வழி வகுக்கும் என இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
எல்இடி ஹெட்லேம்ப்கள், முழு டிஜிட்டல் கன்சோல், கீலெஸ் இக்னிஷன் மற்றும் மாற்றக்கூடிய பேட்டரி பேக் ஆகியவை பைக்கின் மற்ற அம்சங்களாகும். சார்ஜிங் நிலையங்களை தேட, பேட்டரி ஆரோக்கியம் மற்றும் மீதமுள்ள வரம்பை சரிபார்க்க, ரிவோல்ட் ஆப் பயன்படுத்தி, பைக்கை ரைடர் ஸ்மார்ட்போனுடன் இணைக்க முடியும். RV400 தற்போது ரூ. 1.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). இந்திய சந்தையில் இந்த பைக்கின் போட்டியாளர்களில் டார்க் க்ராடோஸ் ஆர் மற்றும் ஓபன் ரோர் ஆகியவை அடங்கும்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…