Categories: Bike News

குறைந்த விலையில் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் அறிமுக விபரம்

உலகின் நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் கூடுதலாக 250சிசி பைக்குகளை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Royal Enfield 250cc

தற்பொழுது ராயல் என்ஃபீல்டு ஆரம்ப நிலை எஞ்சின் 350சிசி ஆக உள்ளதால் பல்வேறு மாடல்கள் இந்த இன்ஜினை பெற்று ஹண்டர் 350 ரூபாய் 1.50 லட்சம் விலையில் துவங்குவதனால் இதைவிட குறைவாகவும் அல்லது எதிர்காலத்தில் விலை அதிகரிக்கும் போது விலையை ஈடுகட்ட 250 சிசி என்ஜின் முக்கிய ஒரு காரணியாக இருக்கலாம்.

2024-Royal-enfield-Hunter-350

250cc இஞ்சின் தயாரிப்பு தொடர்பாக பல்வேறு ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும் கூட தற்பொழுது மேல்மட்டத்தில் இருந்து அனுமதி codename V என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் வரவுள்ள புதிய மாடல்கள் 2026-2027 ஆம் நிதியாண்டில் குறைந்த சிசி பெற்றதாக வரக்கூடும் கூறப்படுகின்றது.

குறிப்பாக அதிகரித்து வரும் போட்டியை ஈடுகட்டவும் மேலும் கடுமையான சவால் நிறைந்த வகையில் விலையை குறைப்பதற்கும் இந்த 250 சிசி இஞ்சின் முக்கிய ஒரு காரணமாக அமையலாம்.

சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் Sherpa 452 என்ஜினை அறிமுகம் செய்து இதில் ஹிமாலயன் 450 மற்றும் தற்பொழுது கொரில்லா 450 என இரண்டு மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டிருக்கின்றது.

source

Recent Posts

செப்டம்பர் 16ல் புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310R அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…

1 day ago

சென்னையில் ஃபோர்டு கார்களை தயாரிக்க ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி..?

அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…

1 day ago

செப்டம்பர் 16ல் கியா கார்னிவல் முன்பதிவு துவங்குகின்றது

வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…

1 day ago

மீண்டும் HF டான் பைக்கை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…

1 day ago

புதிய கார்பன் ஃபைபர் பேட்டர்னில் 2024 யமஹா R15M விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…

2 days ago

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…

2 days ago