Skip to content

ராயல் என்ஃபீல்டு Flat Track 450 காட்சிக்கு வந்தது

RE Flat Track 450

லண்டன் Bike Shed மோட்டோ ஷோ அரங்கில் காட்சிக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையில் ஃபிளாட் டிராக் 450 (RE Flat Track 450) என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கில் உள்ள செர்பா 452 என்ஜின் உட்பட அடிப்படையான மெக்கானிக்கல் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், அலாய் வீல் உடன் மேக்சிஸ் டயரை பெற்றுள்ளது.

மற்றபடி, மிக எளிமையாக டிராக்கிற்கு ஏற்ற வகையிலான டிஜிட்டல் மீட்டருடன் மாறுபட்ட எக்ஸ்ஹாஸ்ட் உள்ளிட்ட அம்சங்களை பெற்றுள்ளது.

செர்பா 452 என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 40 bhp பவர் மற்றும் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க –  புதிய ரோட்ஸ்டெர் ஆர்இ கொரில்லா 450 விபரம்

ராயல் என்ஃபீல்டு Flat Track 450

image source – instagram/wellsaline