Site icon Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் அறிமுக தேதிவிபரம்

வருகின்ற ஜனவரி 12, 2018 தேதியில், புத்தம் புதிய நிறத்தை பெற்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹிமாலய பனி முகடுகளை பின்னணியாக கொண்ட நிறமாக ஸ்லீட் பைக் விளங்குகின்றது.

ஹிமாலயன் ஸ்லீட் பைக்

வென்மை நிற மலை முகடுகளை கொண்ட இமாலய மலையின் முகடுகளில் அமைந்துள்ள நிறத்தை மையமாக கொண்ட நிறத்தை பெற்ற மாடலுக்கு ஹிமாலயன் ஸ்லீட் பைக் என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளது.

தற்போது வெள்ளை (Snow White) மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக வெள்ளை மற்றும் கிரே ஆகிய கலப்பு நிறத்தை கொண்டதாக வெளியாக உள்ளது. புதிய நிறத்தை தவிர்த்து வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பைக்கில், ஃப்யூவல் இன்ஜெக்‌ஷனுடன் பெற்ற 24.5 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 411 சிசி லாங்க் ஸ்டோர்க் எஞ்சின் 32 என்எம் டார்க் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

அடுத்த சில வாரங்களில் புதிய தண்டர்பேர்டு 350X மற்றும் 500Xஆகியவற்றுடன் புதிய நிறத்திலான ஹிமாலயன் பைக் ஸ்லிட் மாடல் ஜனவரி 12, 2018 அன்று சந்தைக்கு வரவுள்ளது. மேலும் நாம் உறுதி செய்யப்பட்டதை போல என்ஃபீல்டு கான்டினென்டினல் ஜிடி 535 பைக் நீக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version