ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஆரம்ப நிலை ஹண்டர் 350 மாடலில் புதிதாக வந்துள்ள கிராபைட் கிரானைட் நிறத்தை தவிர மற்றபடி வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லை விலையிலும் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்படாமல் நடுத்தர ரக மெட்ரோ வேரியண்ட்டை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது
5 வேக கியர்பாக்ஸூடன் 349cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6,100 rpm-ல் 20.2 bhp பவர், 27 Nm டார்க் 4,000 rpmல் வழங்குகின்றது. குறிப்பாக புதிய நிறத்தில் மேட் ஃபினீஷ் செய்யப்பட்டு, நியான் மஞ்சள் நிறத்தை சில இடங்களில் பெற்று இது தெரு கிராஃபிட்டி கலையால் ஈர்க்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான 2025 ஆம் ஆண்டிற்கான ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளில் குறிப்பாக புதுப்பிக்கப்பட்ட சஸ்பென்சனுடன், புதிய இருக்கை மற்றும் கூடுதல் கிரவுண்ட கிளயரண்ஸ் கொண்ட மாடலை அடிப்படையாக பெற்றே வந்துள்ளது.
தற்பொழுது ஹண்டர் 350 ஆரம்ப நிலை மாடல்கள் ரூ.1,49,900 முதல் நடுத்தர ரக வேரியண்ட் புதிய கிராபைட் கிரே நிறமும் ரூ.1,76,750 ஆகவும் டாப் வேரியண்ட் ரூ.1,81,750 ஆக எக்ஸ்-ஷோரூம் விலை உள்ளது.