ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, கிளாசிக் 350 & ஹிமாலயன் பைக்குகள் விலை உயர்வு

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற புல்லட் 350, கிளாசிக் 350 மற்றும் அட்வென்ச்சர் ரக ஹிமாலயன் பைக்குகளின் விலையை ரூ.1,800 முதல் ரூ.2,800 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் ராயல் என்ஃபீல்டின் இன்ட்ர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 பைக்குகளின் விலை ரு.1,837 வரை உயர்த்தப்பட்டிருக்கின்றது. அதனை தொடர்ந்து மற்ற மாடல்களும் விலை உயர்ந்துள்ளது.

புல்லட் 350 மோட்டார் சைக்கிள் விலை அதிகபட்சமாக ரூ.2,800 வரை உயர்த்தப்பட்டு இப்போது குறைந்த விலை புல்லட் மாடல் ரூ.1.27 லட்சம் முதல் துவங்கி, ஸ்டாண்டர்டு புல்லட் ரூ.1.33 லட்சத்திலும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் பெற்ற புல்லட் எலக்ட்ரா ரூ.1.42 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

பிரசத்தி பெற்ற கிளாசிக் 350 பைக்கின் விலை அதிகபட்சமாக ரூ.1800 வரை உயர்த்தப்பட்டு, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற மாடல் ரூ.1.61 லட்சம் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற மாடல் ரூ.1.68 லட்சம் – ரூ.1.86 லட்சம் ஆக அமைந்துள்ளது.

அடுத்தப்படியாக, அட்வென்ச்சர் ஸ்டைல் ஹிமாலயன் பைக்கின் விலை ரூ.1,800 வரை உயர்த்தப்பட்டு, தற்போது ரூ. 1.91 லட்சம் முதல் ரூ.1.95 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

விரைவில், புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 விற்பனைக்கு வெளியாக உள்ளது.

 

Share