Automobile Tamilan

சுசூகி இ-பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது

Suzuki e-Burgman range

2023 டோக்கியா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 44 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற புதிய சுசூகி இ-பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பத்தை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்திய சந்தைக்கு வரும்பொழுது மாறுபட்ட ரேஞ்சு மற்றும் பேட்டரி திறனை கொண்டிருக்கலாம்.

ஜப்பானிய பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பத்தை வழங்கும் கச்சாகோ நிறுவனத்துடன் இணைந்து பேட்டரி மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்க உள்ளது.

Suzuki e-Burgman

தற்பொழுது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் பர்க்மேன் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள லித்தியம் ஐயன் பேட்டரி நுட்ப விபரம் குறிப்பிடப்படவில்லை. முழுமையான சிங்கிள் சார்ஜில் 44 கிமீ ரேஞ்சு மற்றும் மணிக்கு அதிகப்ச வேகம் 60 கிமீ வரை பயணிக்கலாம்.

இ-பர்க்மேன் ஸ்கூட்டரில் உள்ள ஏசி சிங்குரோனஸ் எலக்டரிக் மோட்டார் அதிகபட்சமாக 4kw பவர் மற்றும்18Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

இ-பர்க்மேன் பரிமாணங்களைப் பொறுத்தவரை,  1,825 மிமீ நீளம், 765 மிமீ அகலம் மற்றும் 1,140 மிமீ உயரம் கொண்டது. இ-பர்க்மேன் 147 கிலோ கிராம் எடை மற்றும் 780 மிமீ இருக்கை உயரத்தைக் கொண்டுள்ளது.

Exit mobile version