டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம், கூடுதலாக 5 புதிய நிறங்களை பெற்ற 2018 டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் ரூ. 95,685 ஆரம்ப விலை தொடங்கி கார்புரேட்டர், எஃப்ஐ மற்றும் ஏபிஎஸ் போன்ற தேர்வுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி எடிசனின் அப்பாச்சி ரேஸ் எடிசன் மாடலை தொடர்ந்து, தற்போது மேட் பிளாக், வெள்ளை, கிரே. ஆகிய மூன்று நிறங்களில் சிவப்பு நிற கிராபிக்ஸ் ஸ்டிக்கரை பெற்று சிவப்பு நிற மாடலில் கருப்பு கிராபிக்ஸை பெற்றுள்ளது.
அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 21PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் இது FI என்ஜின் ஆகும். இதன் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும்.
அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 20.5 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் கார்புரேட்டர் என்ஜின் ஆகும். அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 128 கிமீ ஆகும்.
புதிய பைக்கில் A-RT (Anti-Reverse Torque) சிலிப்பர் கிளட்ச் நுட்பத்துடன் கூடிய ஃபிளைஸ்க்ரின் பெற்று சிறப்பான முறையில் ஏரோடைனமிக்ஸ் பெற்றதாக விளங்குகின்றது. வாகனத்தின் நிலைப்பு தன்மை, பெர்ஃபாமென்ஸ், இலகுவாக கியர்களை மாற்றுவதற்கு ஏற்ற வகையிலான அம்சத்தை வழங்கும் திறன் பெற்றதாக ஆன்டி ரிவர்ஸ் டார்க் சிலிப்பர் கிளட்ச் நுட்பத்தை பெற்று விளங்குகின்றது.
புதிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V மாடல் சந்தையில் உள்ள பல்ஸர் 200 NS , டியூக் 200, வரவுள்ள எக்ஸ்ட்ரீம் 200R ஆகிய மாடல்களை எதிர்கொள்ளுகின்றது. முந்தைய மாடலை விட ரூ. 2,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகவும் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனமாக உருவாகிய ஏதெர் எனர்ஜி நிறுவனம் பொதுப்பங்கு வெளியிட்டிருக்கு தயாராகி உள்ளது. ரூபாய்…
ஹீரோவின் மிகவும் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் ஜூம் 125R சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்த சில வாரங்களுக்குள்…
எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த பிறகு முதல் மாடலாக வின்ட்சர் இவி ரூ.9.99…
125சிசி சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டெஸ்டினி 125 ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஒரு விற்பனை எண்ணிக்கை…
இந்தியாவில் BYD நிறுவனம் தனது இ6 மாடலை புதிய இமேக்ஸ் 7 என்ற பெயரில் விற்பனைக்கு அக்டோபர் முதல் வாரத்தில்…
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் முதல் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு மார்ச் 2025ல் வெளியாகும் என…