Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 பைக்கின் வேரியண்ட் வாரியான வசதிகள்

By MR.Durai
Last updated: 8,September 2023
Share
SHARE

tvs apache rtr 310 variants

புதிதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள நேக்டூ ஸ்டீரிட் ஃபைட்டர் அப்பாச்சி RTR 310 பைக்கில் மூன்று விதமான வேரியண்ட் உட்பட BTO (Build To Order) வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.

தற்பொழுது அப்பாச்சி பைக் வரிசையில் டாப் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள RTR 310 முன்பாக விற்பனையில் உள்ள டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ கூட்டணியில் தயாரிக்கப்பட்ட மாடல்களின் அடிப்படையில் முற்றிலும் மேம்படுத்தப்பட்டதாக வந்துள்ளது.

TVS Apache RTR 310 Varaints

பொதுவாக, அனைத்து வேரியண்டிலும் 312.12cc என்ஜின் ஸ்போர்ட், சூப்பர் மோட்டோ மற்றும் டிராக் மோடில் 9,700 rpm-ல் 35.6 bhp பவர் மற்றும் 6,650 rpm-ல் 28.7 Nm டார்க் வழங்குகின்றது. அர்பன், ரெயின் மோடில் 7,500 rpm-ல் 27.1 bhp பவர்  மற்றும் 6,600 rpm-ல் 27.3 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் பொருத்தப்பட்டிருக்கின்றது. டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 டாப் ஸ்பீடு 150Km/hr ஆகும்.

கோல்டன் நிறத்திலான யூஎஸ்டி ஃபோர்க்கு பெற்று பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் கொண்டு மற்றும் 300mm முன்புற டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் பிரேக் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டிருக்கின்றது.

tvs apache rtr 310 bike price

5 அங்குல TFT டிஸ்பிளே கொண்டதாகவும் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் வந்துள்ளது. கார்னரிங் க்ரூஸ் கண்ட்ரோல், 5 விதமான ரைடிங் மோடுகள், கிளைமேட் கண்ட்ரோல் இருக்கை, கார்னரிங் ஏபிஎஸ், கார்னரிங் டிராக்‌ஷன் கட்டுப்பாடு GoPro கேமரா இணைப்பு ஆதரவு, டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பை-டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்ட், டயர் பிரெஷர் மானிட்டர், ஆகியவற்றை கொண்டுள்ளது.

Apache RTR 310 ( Arsenal Black W/o Shifter)

  • க்ரூஸ் கண்ட்ரோல்
  • எல்இடி ஹெட்லேம்ப்
  • 5 ரைடிங் மோடு – ஸ்போர்ட், சூப்பர் மோட்டோ, டிராக், அர்பன் மற்றும் ரெயின்
  • டிராக்‌ஷன் கன்ட்ரோல்
  • 5-இன்ச் டிஜிட்டல் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • த்ரோட்டில் ரைட் பை-வயர்
  • ஸ்லிப்பர் கிளட்ச்

Apache RTR 310 ( Arsenal Black, yellow)

மேலே உள்ள வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக பை க்விக் ஷிஃப்டர் பெற்றுள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர் 310 விலை பட்டியல்

TVS Apache RTR 310 – ₹ 2,42,990 (without shifter)

TVS Apache RTR 310 – ₹ 2,57,990 (Black)

TVS Apache RTR 310 – ₹ 2,63,990 (Yellow)

BTO முறையில் பெற Dynamic Kit மூலம் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு, பித்தளை பூசப்பட்ட செயின் பெற ரூ. 18,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

Dynamic Pro Kit மூலம் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன்,
டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு, பித்தளை பூசப்பட்ட செயின், கிளைமேட் கண்ட்ரோல் இருக்கை, கார்னரிங் ஏபிஎஸ், கார்னரிங் டிராக்‌ஷன் கட்டுப்பாடு GoPro கேமரா இணைப்பு ஆதரவு, டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரூ. 22,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

சேபாங் நீல நிறம் ரூ.10,000 கூடுதலாக கட்டணமாக அமைந்துள்ளது.

tvs apache rtr 310 tail light tvs apache rtr 310 headlight tvs apache rtr 310 handle bar tvs apache rtr 310 bto blue tvs apache rtr 310 bike

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:TVS Apache RTR 310
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2023 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ்
Honda Bikes
2024 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
r15 v4 white
Yamaha
2024 யமஹா R15 V4 விலை, மைலேஜ் சிறப்புகள்
ஹீரோ விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
Vida Electric
ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350
Royal Enfield
2024 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved