Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியல்

by ராஜா
21 February 2024, 3:15 pm
in Bike News
0
ShareTweetSend

tvs escooter price

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐக்யூப் மற்றும் எக்ஸ் என இரு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில், இந்த மாடல்களின் ரேஞ்ச், பேட்டரி, நுட்ப விபரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

ஐக்யூப் தோற்ற அமைப்பில் ஃபேமிலி எலக்ட்ரிக் ஸ்கூட்டராகவும், தற்பொழுது விற்பனையில் உள்ள பெட்ரோல் மாடலுக்கு இணையான ஸ்டைலை கொண்டிருப்பதனால் பொதுவான பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை கவருகின்றது. அடுத்து பிரீமியம் ஸ்டைலில் வெளியான எக்ஸ் உயர் ரக பிரிவில் அமைந்துள்ளது.

2024 TVS iQube

வழக்கமான வடிவமைப்பினை பெற்று மிக இலகுவாக அனுகும் வகையில் அமைந்துள்ள டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐக்யூப் பேஸ் வேரியண்ட் மற்றும் S வேரியண்ட் என இரண்டு விதமாக கிடைக்கின்றது. இந்த இரு வேரியண்டிலும் பொதுவாக 3.04Kwh பேட்டரியை பெற்றுள்ளது.

இரு வேரியண்டுளும் ஈக்கோ மோடில் 70 முதல் 80 Km ரேஞ்சு வழங்கும் நிலையில் பவர் மோடில் அதிகபட்சமாக 55-60Km வழங்குகின்றது. இந்த மாடல்களின் டாப் ஸ்பீடு ஒரு மணி நேரத்துக்கு 78 கிமீ ஆகும்.  650 வாட்ஸ் சார்ஜர் கொண்டு 0-80 % சார்ஜ் செய்ய 4 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும்.

iQube நுட்பவிபரம் iQube iQube S
பேட்டரி பேக் 3.04 kWh 3.04 kWh
டாப் ஸ்பீடு 78 km/h 78 km/h
ரேஞ்ச் (IDC claimed) 100 கிமீ 100 கிமீ
பயணிக்கும் வரம்பு 70 கிமீ 75 கிமீ
ரைடிங் மோட் Eco, Power Eco, Power

17.78 செமீ கொண்ட டிஎஃப்டி கிளஸ்ட்டரில் 35க்கு மேற்பட்ட கனெக்ட்டிவ் வசதிகளை வழங்குவதுடன் 7 நிறங்களில் கிடைக்கின்ற 2024 டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1,35,157 முதல் ரூ.1,40,760 வரை உள்ளது.

iqube escooter

TVS X

டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்கின்ற பிரீமியம் மாடலான X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஆனது 4.4 Kwh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7 kw பவரை வழங்கும் PMSM மோட்டார் அதிகப்படியான பவர் 11 Kw வெளிப்படுத்தும் நிலையில், அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ பெற்று முழுமையான சிங்கிள் சார்ஜில் 140 கிமீ ரேஞ்சு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் ஸ்டைல் மாறுபட்ட டிசைன் கொண்ட இந்த மாடல் ஆன் ரோடு விலை ரூ.2.80 லட்சத்தை எட்டுவதனால் பெரிதாக யாரும் இந்த மாடலுக்கு ஆர்வம் காட்டவில்லை.

tvs x electric scooter details

Related Motor News

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

158 கிமீ ரேஞ்சுடன் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான அரிய வகை காந்தத்தை இந்தியாவுக்கு வழங்க சீனா அனுமதி.?

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்

Tags: Electric ScooterTVS iQubeTVS X
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ather redux electric moto scooter

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது

5,145 ஜிக்ஸர் 250 பைக்குகளை திரும்ப அழைத்த சுசுகி மோட்டார்சைக்கிள்

ரூ.12.99 லட்சம் முதல் 2025 இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் வெளியானது

சுசுகி E-அக்சஸ் ஸ்கூட்டரை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது

125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan