டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற ஸ்கூட்டர் ரக மாடலான ஜூபிடர் 110சிசி மாடலில் புதுப்பிக்கப்பட்ட மாடல் வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தற்பொழுது வரை இந்நிறுவனம் வெளியிட்டிருந்த டீசரில் எந்த மாடல் என்பது குறித்தன எந்த தகவலையும் வெளியிடவில்லை இருந்தாலும் புதிய ஜுபிடர் வெளியிடப்படலாம் என்ற தகவல் சில மாதங்களாகவே கசிந்து வருகின்றது.
மேலும் இந்த புதிய ஜுபிடர் 110 விற்பனையில் உள்ள ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் உள்ள மிகவும் தாராளமான இருக்கைக்கு அடியிலான ஸ்டோரேஜ் இட வசதியை பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அதிக ஸ்டோரேஜ் பெற உள்ள 110சிசி ஸ்கூட்டர் மாடலாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
முன்புற அப்ரான் குறித்தான வெளியிடப்பட்டுள்ள டீசரில் எல்இடி ரன்னிங் விளக்கானது சேர்க்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகின்றது இது தற்பொழுது உள்ள மாடலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட டிசைனை வெளிப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மற்றபடி அடிப்படையான மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களான டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் ஆப்சன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடியதாக அமைந்திருக்கும் கூடுதலாக பல்வேறு புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
தொடர்ந்து தற்பொழுது உள்ள 109.7cc ஏர் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 7.88PS பவர் மற்றும் 8.8Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் இடம் பெற்று இருக்கின்றது.
மேலும் ஒரு சில தகவல்கள் டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர் மாடலின் அடிப்படையில் சிஎன்ஜி ஸ்கூட்டரை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகிருந்தது. எனவே, இது ஸ்கூட்டர் மாடலாக இருப்பதற்கான வாய்ப்புகளும் உளளதாக கூறப்படுகின்றது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…