பஜாஜ் ஆட்டோவை தொடர்ந்து சிஎன்ஜி பைக் மீதான கவனத்தை செலுத்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் துவங்கியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் டிவிஎஸ் மோட்டார் புதிய எலெக்ட்ரிக் டூவீலர் மற்றும் ICE பைக், கூடுதலாக எலக்ட்ரிக் 3 வீலர் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றது. ஏற்கனவே ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதலான சில வேரியண்டுகளை விற்பனைக்கு கொண்டு வந்தது.
சமீபத்தில் பஜாஜ் வெளியிட்ட ஃபிரீடம் 125 பைக் ஆனது எரிபொருள் செலவு 50% வரை குறைக்கும் என குறிப்பிட்டுள்ளதால் பல்வேறு வாடிக்கையாளர்கள் இதன் மீதான ஆர்வத்தை திருப்புவார்கள் என்பதால் இதற்கு போட்டியாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் அல்லது மோட்டார்சைக்கிளை சந்தைக்கான மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவங்கியுள்ளதாக தெரிகின்றது. டிவிஎஸ் மோட்டாரின் செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் அனைத்து விதமான நுட்பங்களிலும் (சிஎன்ஜி, EV, multi-fuels, மேலும் பல..,) நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என தெரிவித்து இருக்கின்றார்.
ஏற்கனவே டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் எலக்ட்ரிக் வாகன சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்று நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளராக விளங்கி வருகின்றது. கூடுதலாக ஒரு எலக்ட்ரிக் டூவீலர் அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு வெளியிடப்படும் என இந்நிறுவனம் குறிப்பிட்டு இருக்கின்றது. மேலும் இந்நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மூன்று சக்கர ஆட்டோரிக்ஷா மாடலும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.
சமீபத்தில் இந்நிறுவனம் அப்பாச்சி பைக்கில் ஸ்பெஷல்
எடிஷனாக பிளாக் எடிசன் மற்றும் ரேஸ் எடிசன் போன்ற மாடல்களை அறிமுகம் செய்தது.
மேலும் படிக்க – டிவிஎஸ் ஸ்கூட்டர்களின் சிறப்புகள்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…