பிரபலமான டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் 125 சூப்பர் ஸ்குவாட் வரிசையில் கூடுதலாக சூப்பர் சோல்ஜர் (Super Soldier Edition) என்ற மாடலை மார்வெல் சூப்பர் ஹீரோ கேப்டன் அமெரிக்கா கதாநாயகனின் உந்துதலில் விற்பனைக்கு ரூ.1,01,666 எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே சூப்பர் ஸ்குவாட் வரிசையில் பிளாக் பாந்தெர், தோர், ஸ்பைடர்மேன் உந்துதலில் கிடைக்கின்றது.
புதிதாக வந்துள்ள என்டார்க் 125 சூப்பர் சோல்ஜர் வேரியண்டில் துணிச்சலான கேமோ மூலம் ஈர்க்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி எவ்விதமான மாற்றங்களும் இல்லாம்ல் அமைந்துள்ளது.
CVTi-REVV 124.79 சிசி ஒற்றை சிலிண்டர் 4 ஸ்டோர்க் 3 வால்வுகளை கொண்ட ஏர்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 9.3 bhp ஆற்றலை 7500Rpm-ல் வழங்குவதுடன், அதிகபட்சமாக 7500rpm-ல் 10.5 Nm டார்க்கினை வழங்குகின்றது.
இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட்போனை ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் வகையிலான ஆதரவினை கொண்டதாக வந்துள்ள என்டார்க் 125 மாடலில் டிவிஎஸ் SmartXonnect எனப்படும் நுட்பம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் ஆகும்.
தற்பொழுது 2025 டிவிஎஸ் என்டார்க் 125 விலை ரூ.96,021 முதல் ரூ.1,12,641 வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது. இந்த மாடலுக்கு போட்டியாக ஜூம் 125, டியோ 125, அவெனிஸ் 125, ஏப்ரிலியா எஸ்ஆர் 125 போன்றவை உள்ளது.