110சிசி சந்தையில் கிடைக்கின்ற பட்ஜெட் விலை ஸ்கூட்டர்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஸ்கூட்டி ஸெஸ்ட (Scooty Zest) 110 மாடலில் SXC என்ற புதிய வேரியண்ட் சேர்க்கப்பட்டு பாடி கிராபிக்ஸ் மற்றும் நிறங்கள் புதுப்பிக்கப்பட்டு விலை ரூ.72,100 (எக்ஸ்-ஷோரூம்) விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பாக கிளாஸ் மற்றும் மேட் சீரிஸ் என இரு வேரியண்டில் முறையே ரூ.65,400 மற்றும் ரூ.68,800 என கிடைத்து வந்த நிலையில் கூடுதலாக ரூ.3,300 விலையில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு ப்ளூடூத் வாயிலாக இணைத்து டரன் பை டர்ன் நேவிகேஷன், கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் போன்றவற்றை பெறும் வகையில் வழங்கப்பட்டிருப்பதுடன் கூடுதலாக சராசரி மைலேஜ் உள்ளிட்ட அம்சங்களை பெறலாம்.
இந்த புதிய ஸ்கூட்டி ஜெஸ்ட் 110யில் வந்துள்ள SXC வேரியண்டில் கிராபைட் கிரே மற்றும் போல்டு பிளாக் என இரு நிறங்களுடன் பாடி ஸ்டிக்கரிங் ஸ்போர்டிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இது புதிதாக ஸ்கூட்டர் வாங்குபவர்களை கவரும் வகையில் அமைந்திருப்பதுடன் சிறப்பான ஸ்டைலிங் மேம்பாடாக உள்ளது.
இந்த ஸ்கூட்டரின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் வழங்கப்படாமல் தொடர்ந்து E20 ஆதரவினை பெற்ற 109.7cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக பவர் 7.71hp மற்றும் டார்க் 8.8Nm வழங்குவதுடன் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.
குறிப்பாக பெண்கள் இலகுவாக அனுகும் வகையில் 760மிமீ இருக்கை உயரத்துடன் வெறும் 103 கிலோ எடை மட்டுமே கொண்டுள்ள ஸ்கூட்டரின் இருபக்கத்திலும் டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்று 10 அங்குல வீல் உள்ளது.
இந்த ஸ்கூட்டருக்கு போட்டியாக டெஸ்டினி 110, ஆக்டிவா 110, ஜூபிடர் 110 போன்ற மாடல்களுடன், ஜூம் 110 மற்றும் டியோ 110 போன்றவை 110சிசி சந்தையில் கிடைக்கின்றது.