Automobile Tamilan

ஏப்ரிலியா RS 457 ஸ்போர்ட்டிவ் பைக் அறிமுக விபரம்

aprilia rs 457

வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி ஏப்ரிலியா RS 457 ஸ்போர்ட்டிவ் பைக்கின் அறிமுகம் மேற்கொள்ளப்பட்ட உள்ளதால், பல்வேறு முக்கிய விபரங்கள் விலை மற்றும் முன்பதிவு தேதி போன்றவை அறிவிக்கப்படலாம்.

புதிதாக வரவிருக்கும் ஆர்எஸ் 457 மாடல் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஆர்எஸ் 600, ஆர்எஸ் 1100 பைக்கின் வடிவமைப்பினை பெற்றதாக அமைந்துள்ளது.

Aprilia RS 457

அலுமினியம் பெரிமீட்டர் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஏப்ரிலியா RS 457 பைக்கில் 457cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின், இரட்டை கேம் ஷாஃப்ட் டைமிங் (DOHC) கொண்டு ஒவ்வொரு சிலிண்டருக்கு நான்கு வால்வுகளை பெற்று அதிகபட்சமாக 47 hp பவர் வெளிப்படுத்துகின்றது.

41 மிமீ  முன்புற யூஎஸ்டி ஃபோர்க் 120 மிமீ பயணக்கும் வசதியுடன்,  ப்ரீலோட் அட்ஜெஸ்ட்டிபிட்டி கொண்ட 130 மிமீ பயணத்திற்காக, ஸ்டீல் ஸ்விங்கார்மில் மோனோஷாக் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் சிஸ்டத்தில் பைபிரே ரேடியல் மவுண்ட் 4 பிஸ்டன் காலிபர் உடன் 320mm டிஸ்க் பெற்று மற்றும் 220mm டிஸ்க் பிரேக் உள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் அமைப்பு கொண்டுள்ளது.

ஆர்எஸ் 457 மாடலில் பொதுவாக 17-இன்ச் வீல் பெற்று முன்பக்கத்தில் 110/70 டயர்களும், பின்புறத்தில் 150/60 டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. 175 கிலோ எடை கொண்டுள்ள ஏப்ரிலியா ஆர்எஸ் 457 பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட்,  5-இன்ச் TFT வண்ண கிளஸ்டரைப் பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் ஹேண்டில் பார் கட்டுப்பாடுகளில் பேக்லைட் உள்ளது.

ஏப்ரிலியா RS 457 செப்டம்பர் 20, 2023-ல் இந்திய மோட்டோ ஜிபி பந்தயத்தில் அறிமுகமாகும்.

Exit mobile version