Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹீரோ வெளியிட உள்ள இரண்டு ஜூம் ஸ்கூட்டர்களின் விபரம்

ஹீரோ Xoom வரிசையில் உள்ள ஜூம் 110, ஜூம் 125, மற்றும் ஜூம் 160 ஸ்கூட்டர்களின் எஞ்சின் விபரம் மற்றும் சிறப்புகள்

by MR.Durai
13 March 2024, 2:32 am
in Bike News
0
ShareTweetSend

ஹீரோ ஜூம் ஸ்கூட்டர்கள்

ஹீரோ ஜூம் ஸ்கூட்டர் வரிசையில் 125சிசி மற்றும் மேக்ஸி ஸ்டைல் பெற்ற 160சிசி என இரண்டு மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

சந்தையில் விற்பனையில் உள்ள ஸ்டைலிஷான ஜூம் 110 நல்ல வரவேற்பினை ஹீரோ நிறுவனத்துக்கு ஸ்கூட்டர் மார்கெட்டில் பெற்று தந்துள்ள நிலையில், இதே ஸ்போர்ட்டிவ் பிரிவில் மாறுபட்ட ஸ்டைலில் ஜூம் 125ஆர் காட்சிப்படுத்தப்பட்டது.

ஹீரோ ஜூம் 125

அடுத்த சில மாதங்களுக்குள் வரவுள்ள ஜூம் 125ஆர் கான்செப்ட்டின் அடிப்படையிலான ஸ்கூட்டர் மாடலுக்கு போட்டியாக சந்தையில் உள்ள டிவிஎஸ் என்டார்க் 125, சுசூகி அவெனிஸ் 125, ஹோண்டா டியோ 125 ஆகியவற்றை எதிர்கொள்வதுடன் மற்ற 125சிசி மாடல்களையும் எதிர்கொள்ள உள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 124.6cc எஞ்சின் பொருத்தப்பட்டு 9.5hp பவர் மற்றும் 10.14Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ள மாடலில் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ஹீரோ கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்க உள்ளது.

14-இன்ச் அலாய் வீல் பெறுகின்ற ஜூமில் முன்பக்க டயரில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் பெற்று முழுமையாக அனைத்து விளக்குகளும் எல்இடி ஆக அமைந்துள்ளது.  ஹீரோ Xoom 125 ரூ.85,000 விலைக்குள் துவங்க வாய்ப்புள்ளது.

Hero Xoom 125R Side view

ஹீரோ ஜூம் 160

மேக்ஸி ஸ்டைல் பெற்ற ஸ்கூட்டராக காட்சிக்கு வந்த உற்பத்தி நிலை எட்டிய ஜூம் 160 மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் ஏப்ரிலியா SXR 160 மற்றும் யமஹா ஏரோக்ஸ் 155 என இரு மாடல்கள் கிடைத்து வருகின்றது.

ஜூமில் டாப் மாடலாக வரவுள்ள இந்த ஸ்கூட்டரில்  லிக்யூடு கூல்டு 156cc, ஒற்றை சிலிண்டர் என்ஜின் அதிகபட்ச பவர் 14hp மற்றும் 13.7Nm டார்க் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் ஆனது பெற்றுள்ளது.

14-இன்ச் வீல் பெற்று கீலெஸ் ரிமோட் மூலம் திறக்கும் வகையில் பூட், மற்றும் ஸ்டார்ட், முழுமையாக அனைத்தும் எல்இடி விளக்குகள், டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ஹீரோ கனெக்ட் வசதிகளை பெறுகின்றது.

வரும் பண்டிகை காலத்துக்கு முன்பாக விற்பனைக்கு வரவுள்ள ஹீரோ Xoom 160 விலை ரூ.1.35-1.40 லட்சத்தில் துவங்க வாய்ப்புள்ளது.

ஹீரோ ஜூம் 160

ஹீரோ ஜூம் 110

தற்பொழுது விற்பனையில் கிடைத்து வருகின்ற ஜூம் 110 மாடலில் உள்ள 110.9cc எஞ்சின் 7250 ஆர்பிஎம்மில் 8 பிஎச்பி பவர், 5750 ஆர்பிஎம்மில் 8.7 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. ஸ்டைலிஷான தோற்ற அமைப்புடன் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் அமைந்துள மாடலுக்கு போட்டியாக டியோ 110 உட்பட மற்ற 110சிசி ஸ்கூட்டர்கள் உள்ளன.

LX, VX மற்றும் ZX என மூன்று விதமாக கிடைக்கின்ற இந்த மாடலில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று கனெக்ட்டிவிட்டி அம்சங்களுடன் அனைத்தும் முழுமையாக எல்இடி விளக்குகளாகவும், கார்னரிங் எல்இடி விளக்கு உள்ளிட்ட கவனிக்கதக்க அம்சங்களை பெற்றதாக உள்ளது.

ஹீரோ Xoom 110 விலை ரூ.77,070 முதல் ரூ.85,528 வரை (எக்ஸ்-ஷோரூம் சென்னை) உள்ளது.

 

xoom red

Related Motor News

ரூ.15,743 வரை ஹீரோ பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

OBD-2B பெற்ற 2025 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு வெளியானது

ஹீரோ ஜூம் 125 ஸ்கூட்டரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை.!

ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

மேக்ஸி ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்.!

Tags: Hero Xoom 110Hero Xoom 125Hero Xoom 160
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new tvs raider 125 abs

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

hero xtreme 125r orange

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 அட்வென்ச்சர் EICMA 2025ல் அறிமுகம்

சுசூகி 2026 V-STROM SX புதிய நிறங்களில் அறிமுகமானது

₹ 2.99 லட்சத்தில் பிஎம்டபிள்யூ G 310 RR லிமிடெட் எடிசன் சிறப்புகள்

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R என்னென்ன வசதிகள் எதிர்பார்க்கலாம்.!

விடா எலக்ட்ரிக் உரிமையாளர்களுக்கு வாரண்டி மற்றும் சிறப்பு சலுகைகள்

ரூ.2.74 லட்சத்தில் அல்ட்ராவைலட் X47 கிராஸ்ஓவர் விற்பனைக்கு அறிமுகமானது

புதிய ஹீரோ டெஸ்டினி 110 விற்பனைக்கு வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan