மலேசியாவில் ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய 2024 CBR250RR ஸ்போர்ட்டிவ் பைக்கில் பவர் அதிகரிக்கப்பட்டு புதிய பாடி கிராபிக்ஸ் பெற்றுள்ளது. மற்றபடி, டிசைனில் பெரிய அளவில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.
ட்வீன் சிலிண்டர் என்ஜின் பெற்றுள்ள ஹோண்டாவின் சிபிஆர்250ஆர்ஆர் பைக்கில் உள்ள 8 வால்வுகளை கொண்ட 249சிசி என்ஜின் அதிகபட்சமாக 41bhp பவரை 13,000rpm-லும், 25Nm டார்க்கினை 11,000rpm-ல் வழங்குகின்றது. குறிப்பாக முந்தைய மாடலை விட 1 hp வரை பவர் அதிகரிக்கப்பட்டுள்ளதை தவிர, என்ஜின் கம்பிரெஷன் விகிதம் 12.1:1 லிருந்து 12.5:1 ஆக மாற்றப்பட்டு, பிஸ்டன், ஆயில் ரிங் டென்ஷன் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டு மேம்பட்ட செயல்திறனை வழங்கும் வகையில் என்ஜின் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ள பைக்கில் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், க்விக் ஷிஃப்டர் மற்றும் த்ரோட்டில்-பை-வயர் சிஸ்டம் ஆகியவற்றுடன் ஸ்போர்ட்+, ஸ்போர்ட் மற்றும் கம்ஃபோர்ட் மூன்று ரைடிங் முறைகள் உள்ளன.
டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ள நிலை முன்புறத்தில் Separate Function Fork (SFF-BP) அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது. முன்புறத்தில் 110/70 – 17 M/C (54S) மற்றும் பின்புறத்தில் 140/70 – 17 M/C (66S) டயர் உள்ளது.
முழுமையான எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி டர்ன் மற்றும் ஸ்டாப் லைட்டுகளை பெற்றுள்ள மாடலில் எல்சிடி கிளஸ்ட்டர் வழங்கப்பட்ட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் மலேசியாவில் RM27,999 (ரூ.4,95,271) ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கு நிச்சயமாக அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் இதன் போட்டியாளரான யமஹா R3 இந்திய சந்தையில் வெளியாகியுள்ளது.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…