Auto News

160கிமீ ரேஞ்ச் வழங்கும் 2024 ரிவோல்ட் RV400 அறிமுகமானது

2024 Revolt RV400 electric bike

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் வகையிலான மேம்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான RV1 மற்றும் RV1+ அறிமுகத்தின் பொழுது அப்டேட் செய்யப்பட்ட ஆர்வி400 பைக் புதிய லூனார் க்ரீன் நிறத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்போது இந்த எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டுள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 0-100% பெறுவதற்கு 1 மணி நேரம் 30 நிமிடங்களில் சார்ஜ் (முன்பாக 0-80% 1 மணி நேரம் 20 நிமிடங்கள்) செய்து கொள்ளலாம். கூடுதலாக ரிவர்ஸ் பார்க்கிங் உதவி, தெளிவான புதிய டிஸ்பிளே கிளஸ்ட்டரில் ப்ளூடூத் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளது.

3.24 kWh பேட்டரி பேக்கை 3 kW பவர் வழங்கும் மிட் டிரைவ் மோட்டார் மூலம் இயக்கப்படும் RV400 ஈக்கோ மோடில் 160 கிலோ மீட்டர் வரையிலான ரேஞ்ச் வெளிப்படுத்தும். முந்தைய மாடல் 150 கிலோ மீட்டர் வழங்கியது. இந்த பைக்கின் அதிகபட்ச வேக மணிக்கு 85 கிமீ ஆக உள்ளது.

இரு பக்க டயர்களிலும் பொதுவாக 240mm டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, சிறப்பான பாதுகாப்பினை மேம்படுத்த கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்று முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் கொண்டதாக வந்துள்ளது.

Revolt RV400 ₹ 1.40 லட்சம்

(Ex-showroom)