Automobile Tamilan

புதிய நிறத்தில் டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X வெளியானது

Triumph Scrambler 400X updated

புதிய டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X மாடலில் மெக்கானிக்கல் உட்பட அடிப்படையான மாற்றங்களும் இல்லாமல் புதிய பியர்ல் மெட்டாலிக் வெள்ளை நிறத்தை மட்டும் பெற்று ரூ.₹2,64,496 (ex-showroom) விலையில் வெளியாகியுள்ளது.

பெர்ல் மெட்டாலிக் வெள்ளை நிறத்துடன் டேங்கின் மேலிருந்து கீழாக கருப்பு பட்டை  மற்றும் பைக்கின் தோற்றத்திற்கு கவர்ச்சியை தருகின்றது. மற்றபடி, 400X பைக்கில் தொடர்ந்து மேட் காக்கி பச்சை உடன் வெள்ளை, சிவப்பு உடன் கருப்பு, கருப்பு உடன் சில்வர் ஐஸ் என தற்போது 4 நிறங்களை கொண்டுள்ளது. இந்த பைக்கில் TR சீரிஸ் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

43 மிமீ அப்சைடூ டவுன் ஃபோர்க்  மற்றும் கேஸ் சார்ஜ்டு மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்று ஹைப்ரிட் ஸ்பைன்/டியூபுலர் பெரிமீட்டர் ஃப்ரேம் கொண்டுள்ள மாடலில் பைக்கின் முன்புறத்தில் 19 இன்ச் மற்றும் 17 இன்ச் பெற்று ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டத்துடன் 320 மிமீ டிஸ்க் மற்றும் 230 மிமீ டிஸ்க் உள்ளது.

சமீபத்தில் டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்பீடு T4 என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு வெளியானது.

Exit mobile version