Categories: Bike News

கூடுதல் வசதியை பெற்ற 2024 யமஹா ஃபேசினோ S ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்கள்

Yamaha Fascino S features

யமஹா மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள 2024 ஃபேசினோ S (Fascino S) மாடலில் மேட் ரெட், மேட் பிளாக் மற்றும் டார்க் மேட் ப்ளூ என மூன்று நிறங்களை பெற்று ரூ.95,350 முதல் ரூ.96,150 ( எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)வரை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பாக விற்பனையில் உள்ள யமஹா ஃபேசினோ மாடல் டிரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான பிரேக் ஆப்ஷனுடன் ரூ.83,950 விலையில் துவங்குகின்ற நிலையில் சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் ஹைபிரிட் சார்ந்த வசதியை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரில் 8.2 hp பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 10.3 Nm டார்க் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறுகின்ற ப்ளூடூத் கனெக்ட்டிவ் சார்ந்த வசதிகளை கொண்ட இந்த வேரியண்டில் உள்ள Y-Connect ஆப் பெறுகின்ற Fascino S மாடலில் சேர்க்கப்பட்டுள்ள ‘Answer Back’ வசதி தரப்பட்டுள்ளது.  ஆன்சர் பேக்’ எனப்படும் யமஹாவின் Y கனெக்ட் மொபைல் அப்ளிகேஷன் மூலம் இந்த அம்சத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆப்பில் உள்ள ‘Answer Back’ பட்டனை அழுத்துவதன் மூலம், ரைடர்கள் தங்கள் ஸ்கூட்டர் எங்கே உள்ளது என எளிதாகக் கண்டறிய இண்டிகேட்டர் ஒளிரும் மேலும் ஹார்ன் இரண்டு விநாடிகள் ஒலிக்கும் என யமஹா தெரிவித்துள்ளது.

மற்றபடி, எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் வழக்கமான ஸ்கூட்டரை போலவே அமைந்துள்ளது.

Color Price (Ex-showroom, Tamil Nadu)
Matte Red & Matte Black Rs. 95,350/-
Dark Matte Blue Rs. 96,150/-