Categories: Bike News

புதிய நிறங்களில் யமஹாவின் எம்டி-03, எம்டி-25 அறிமுகம்

yamaha mt03

யமஹா நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் நேக்டூ ஸ்டைல் மாடல்களான எம்டி-03 மற்றும் எம்டி-25 என இரு பைக்குகளிலும் புதுப்பிக்கப்பட்ட நிறங்களை பெறுகின்றது. குறிப்பாக எம்டி-03 பைக்கில் சேர்க்கப்பட்டுள்ள நீல நிறம் ஏற்கனவே சந்தையில் உள்ள யமஹாவின் ஆர்3 பைக்குகளில் இடம்பெற்றுள்ளதாகும்.

எம்டி-25 மாடலை பொறுத்தவரை, மிட்நைட் கருப்பு மற்றும் சியான் என இரு நிறங்களை பெற்றுள்ளது. எம்டி-25 பைக்கில் உள்ள 249சிசி ட்வீன் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 35.1 PS பவர் மற்றும் 22.6 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்து, இந்திய சந்தையிலும் கிடைக்கின்ற யமஹா எம்டி-03 பைக்கில் 321cc பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய 10.750 rpm-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 40.4 bhp, மற்றும் 9.000 rpm-ல் 29.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

ஏற்கனவே சந்தையில் உள்ள மாடலின் எம்டி-03 விலை ரூ.4.61 லட்சம் (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) ஆகும். புதிய நிறத்தை பெற்ற எம்டி-03 விரைவில் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.