Yamaha MT-15 : இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள புதிய யமஹா எம்டி 15 பைக்கின் பவர் மற்றும் டார்க் உட்பட பல்வேறு முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது. யமஹா எம்டி-15 பைக் விலை ரூ.1.27 லட்சத்தில் தொடங்க வாய்ப்புள்ளது.
வரும் பிப்ரவரி இறுதி வாரம் அல்லது மாரச் மாத தொடக்க வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்டைலிஷான யமஹா எம்டி 15 பைக்கின் CVMR அனுமதி சான்றிதழ் வாயிலாக முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது.
ஆர்15 வெர்ஷன் 3.0 பைக்கில் இடம்பெற்றுள்ள என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல், எம்டி-15 பைக்கில் 19.1 ஹெச்பி பவர், மற்றும் 14.7 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் புதிய 155சிசி எஞ்சின் இடம்பெற்று 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் வசதியை பெற்றிருக்கும்.
MT-15 பைக்கின் நீலம் 2,020மிமீ , 800மிமீ அகலம் மற்றும் 1,070மிமீ உயரம் கொண்டுள்ளது. இந்த பைக்கின் வீல்பேஸ் 1,335 மிமீ ஆகும். பைக்கின் மொத்த வாகனத்தின் எடை 238 கிலோ ஆகும். கெர்ப எடை 138 கிலோ கிராம் ஆகும்.
சர்வதேச மாடலில் உள்ள எல்இடி ஹெட்லைட், பிரேக் ஆப்ஷனுடன் டுயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இடம்பிடித்திருக்கலாம். ஆனால் இந்த பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க்கு சஸ்பென்ஷனுக்கு மாற்றாக சாதாரன டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனை பெற்று விலை குறைப்பிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த மாற்றம். பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை இந்த எம்டி 15 பைக் இந்தியாவில் பெற்றிருக்கும்.
யமஹா எம்டி 15 பைக்கின் விலை ரூ.1.27 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் யமஹா டீலர் சந்திப்பில் இந்த பைக் குறித்தான டீசர் வெளியிடப்பட்டிருந்த நிலையில் , சில முன்னணி டீலர்கள் முன்பதிவை தொடங்கியுள்ளது.