மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட யமஹா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற XSR155 நியோ ரெட்ரோ ஸ்டைலை பெற்று மிகவும் சக்திவாய்ந்த 155cc என்ஜினுடன் இந்திய சந்தையில் ரூ.1,49,990 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
70வது ஆண்டு விழாவை கொண்டாடும் யமஹா நிறுவனம் இந்தியாவில் நடப்பு 2025-2026 ஆம் நிதியாண்டில் 10 புதிய மாடல்கள் உட்பட 20க்கு மேற்பட்ட மாடல்களை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், முக்கியமாக இந்தியாவில் FZ-Rave, ஏரோக்ஸ் E, ஏரோக்ஸ் EC-06 என இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் வெளியிட்டுள்ளது.
18.1 hp , 14.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 155 சிசி லிக்விட் கூல்டு எஞ்சின் பெற்றுள்ளது.

