Automobile Tamilan

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

new yamaha xsr155

இந்தியாவில் மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு உள்ளான மாடலான XSR155 நியோ ரெட்ரோ ஸ்டைலுடன் சக்திவாய்ந்த லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்று சிறப்பான வசதிகளுடன் விளங்குகின்ற இந்த பைக்கை வாங்குவதற்கு முன்பாக அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே பார்க்கலாம்.

XSR155 டிசைன்

குறிப்பாக neo-retro வடிவமைப்பை விரும்பும் இளைய தலைமுறையினருக்கு, தினசரி நகர்ப்புற பயணத்தில் ஒரு நல்ல அனுபவம் தரும் மாடலாக விரும்பினால் யமஹாவின் நம்பகமான என்ஜினை கொண்டுள்ள எக்ஸ்எஸ்ஆர் 155 டிசைனை பற்றி முதலில் பார்க்கலாம்.

பச்சை, நீலம், கிரே மற்றும் சிவப்பு என நான்கு நிறங்களை பெற்ற XSR155-யின் மிகப்பெரிய வட்ட வடிவ கிளாசிக் எல்இடி ஹைலைட் உடன் ரெட்ரோ-மாடர்ன் லுக், டீயர்-டிராப் டேங்க், உயரமான ஹான்டில்பார், ஒரே நீளமான குஷன் சீட் போன்றவை கவர்ந்திழுக்கின்றன.

எம்டி-15, ஆர்-15 என இரண்டிலிருந்தும் முற்றிலும் வேறுபட்ட டிசைன் வடிவமைப்பு கிளாசிக் ரசிகர்களுக்கான ஒரு தீர்வை வழங்குகின்றது.

XSR155 என்ஜின் விபரம்

155cc VVA தொழில்நுட்பம் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை, நிருபிக்கப்பட்ட தரம், பெர்ஃபாமென்ஸ் கொண்டு 10,000rpm-ல் 18.1 bhp பவர், 7,500rpm-ல் 14.2 Nm டார்க் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், லைட் கிளட்ச் அனுபவத்தை வழங்குவதுடன் இதே என்ஜினை R15/MT-15-லும் பார்த்திருக்கலாம்.

உண்மையான மைலேஜ் எதிர்பார்ப்பு நம் சாலைகளில் லிட்டருக்கு 47 கிமீ முதல் 50 கிமீ வரை கிடைக்கலாம்.

மற்ற வசதிகள்

மிக முக்கியமாக பாதுகாப்பு சார்ந்த வசதிகளில் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுத்திருப்பதுடன் டிராக்‌ஷன் கண்ட்ரோல் கொடுத்திருப்பது மிகப்பெரிய பாதுகாப்பு சார்ந்த வசதியாகும், இதன் மூலம் வழுவழுப்பான சாலைகளில் சிறப்பான ரைடிங்கை பெறமுடிகின்றது.

டெல்டாபாக்ஸ் சேஸீஸ் கொண்டுள்ள இந்த எக்ஸ்எஸ்ஆர் 155 பைக்கின் ரைடிங்கில் சிறந்த ஸ்டெபிளிட்டி கொண்டிருப்பதுடன் சஸ்பென்ஷனில் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் உடன் ஒற்றை இருக்கை அமைப்பு நகரங்களுக்கு இடையிலான விரைவான பயணம் மற்றும் நீண்ட நெடுஞ்சாலை பயணத்துக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

வட்ட வடிவ எல்சிடி கிளஸ்ட்டருடன் யமஹாவின் Y-connect ஆப் ஆதரவுடன் கால் அல்லது எஸ்எம்எஸ் அலர்ட் உள்ளிட்ட வசதிகளுடன் ரைடிங் தரவுகளை பெற்றுள்ளது.

கூடுதல் கஸ்டமைஸ் வசதிகள்

சொந்தமாக இரு கஸ்டமைஸ் வசதிகளை யமஹா நிறுவனமே வெளியிட்டிருப்பது மிகப்பெரிய பலமாகும்,இதனால் வாரண்டி பாதிப்புகள் இருக்காது. அதே போல விருப்பமான பாகத்தை மட்டும் பெறலாம் அல்லது முழு கிட்டையும் பெறலாம்.

ஸ்க்ராம்ப்ளர் கிட்டில் பார்-எண்ட் கண்ணாடிகள், ரப்பர் டேங்க் பேட்கள்,  இருக்கை கவர், ஃப்ளைஸ்கிரீன், அட்ஜெஸ்டபிள் லீவர்கள், நெம்பர் பொறிக்கப்பட்ட பக்கவாட்டு பேனல் மற்றும் வேறு நெம்பர் பிளேட் ஹோல்டர் ஆகியவை அடங்கும். இந்த பாகங்கள் ஒவ்வொன்றையும் நீங்கள் தனித்தனியாக வாங்கலாம் அல்லது முழு கிட்டையும் ரூ.24,850க்கு பெறலாம்.

மறுபுறம், கஃபே ரேசர் கிட் மூலமாக ஸ்போர்ட்டியர் இருக்கை, ஹெட்லைட் கவுல், லிவர் ப்ரொடெக்டர்கள், சைடு பேனல்கள் மற்றும் அட்ஜெஸ்டபிள் லீவர்கள் கிடைக்கிறது. மீண்டும், நீங்கள் இந்த பாகங்களை தனித்தனியாக அல்லது முழு கிட்டையும் ரூ.28,180க்கு பெறலாம்.

யமஹா XSR 155 வாங்கலாமா ?

பவர்ஃபுல், நம்பகமான தரம் என இரண்டையும் பெற்ற என்ஜின், சிறப்பான மைலேஜ உடன் மிக நேர்த்தியான நியோ ரெட்ரோ வடிவமைப்பு உள்ள இந்த மாடல் தமிழ்நாட்டில் ரூ.1.51 லட்சத்தில் கிடைக்கின்றது.

இந்த மாடலுக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350, டிவிஎஸ் ரோனின் போன்றவற்றை எதிர்கொள்வதுடன் மற்ற 150-160cc பைக்குகளில் சற்று வேறுபட்ட டிசைனை பெறுவதால் கவருகின்றது. ரெட்ரோ ஸ்டைல், சிறந்த ரைடிங் அனுபவத்தை பெற விரும்புவோர் தாராளமாக வாங்கலாம்.

 

Exit mobile version