Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bajaj

2025 பஜாஜ் சேத்தக் 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

By MR.Durai
Last updated: 28,April 2025
Share
SHARE

2025 பஜாஜ் சேத்தக் 35 ஆன்ரோடு விலை

பஜாஜ் ஆட்டோவின் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிதாக வந்துள்ள 35 சீரிஸ் மாடலில் 3501, 3502 மற்றும் 3503 என மூன்று வேரியண்டுகளின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

Contents
  • Bajaj Chetak 35 Series
  • 2025 பஜாஜ் சேத்தக் 35 நுட்பவிபரங்கள்
  • 2025 Bajaj Chetak 35 Rivals
  • 2025 Bajaj Chetak 35 electric Scooter on-Road Price in Tamil Nadu
  • Faq chetak 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
  • Chetak 35 e scooter Image Gallery

Bajaj Chetak 35 Series

ரெட்ரோ ஸ்டைலிங் அமைப்பினை கொண்டுள்ள சேத்தக் 35 சீரிஸ் மாடலில் உள்ள 3501, 3502 மற்றும் 3503 என மூன்று வேரியண்டிலும் பொதுவாக 3.5Kwh  பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 73 கிமீ வேகத்தை கொண்டுள்ளது. BLDC வகை மோட்டாரிலிருந்து 3KW தொடர்ந்து வெளிப்படுத்தும், அதிகபட்சமாக 4KW பவர் வெளிப்படுத்துகின்றது.

புதிய சேத்தக் 35 மாடல் அதிகபட்சமாக 35 லிட்டர் ஸ்டோரேஜ் வழங்கும் வகையில் பேட்டரி ஃபுளோர் போர்டிற்கு அடியில் மாற்றப்பட்டு மிகவும் பாதுகாப்பான ட்யூப்லெர் சேசிஸ் பெற்றுள்ளது.

  • டாப் மாடலான Chetak 3501 வேரியண்டில் 3.5Kwh பேட்டரி பொருத்தப்பட்டு முழுமையான சார்ஜில் 153 கிமீ பயணிக்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டு மணிக்கு அதிகபட்ச வேகம் 73 கிமீ கொண்டுள்ளது. ஈக்கோ, ஸ்போர்ட் என இரு ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 120 கிமீ பயணிக்கலாம்.  இந்த மாடலில் TFT தொடுதிரை கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் டெக்பேக் ஆப்ஷனலாக பெறுவதுடன் ரிமோட் கீ உள்ளது. 950W ஆன்-போர்டு சார்ஜரின் மூலம் 0-80 % சார்ஜ் ஏற 3 மணி நேரம் போதுமானதாகும்.
  • இரண்டாவது மாடலான Chetak 3502 வேரியண்டில் 3.5Kwh பேட்டரி பொருத்தப்பட்டு முழுமையான சார்ஜில் 153 கிமீ பயணிக்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டு மணிக்கு அதிகபட்ச வேகம் 73 கிமீ கொண்டுள்ளது. ஈக்கோ, ஸ்போர்ட் என இரு ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 120 கிமீ பயணிக்கலாம். 650W ஆஃப்-போர்டு சார்ஜரின் மூலம் 0-80 % சார்ஜ் ஏற 3.25 மணி நேரம் போதுமானதாகும். எல்சிடி கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு மெக்கானிக்ல் கீ கொண்டு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் டெக்பேக் ஆப்ஷனலாக உள்ளது.
  • குறைந்த விலை Chetak 3503 வேரியண்டில் 3.5Kwh பேட்டரி பொருத்தப்பட்டு முழுமையான சார்ஜில் வெளிப்படுத்தும் ரேஞ்ச் 155கிமீ என உறுதி செய்யப்பட்டு அதிகபட்ச வேகம் மணிக்கு 63 கிமீ ஆகும். மெக்கானிக்கல் கீ உடன் இரு பக்க டயரிலும் டிரம் பிரேக் பெற உள்ள இந்த ஸ்கூட்டரிலும் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் டெக்பேக் ஆப்ஷனலாக உள்ளது.

டியூப்லெர் ஸ்டீல் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள 2025 பஜாஜ் சேத்தக் 35 இ ஸ்கூட்டரில் முன்புறத்தில் ஒற்றை பக்க ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் அப்சார்பர் பின்புறத்தில் கொடுக்கப்பட்டு, முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்குடன், முன் சக்கரங்களின் 90/90-12 மற்றும் பின்புறத்தில் 90/100-12 பெற்று ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்தை பெறுகின்றது. இதில் 3503 மாடல் மட்டும் இரு பக்க டயரிலும் டிரம் பிரேக் கொண்டுள்ளது.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 3 ஆண்டு அல்லது 50,000 கிமீ பேட்டரி + மோட்டார் உத்தரவாதம் வழங்குகிறது.

chetak 3502 lcd cluster

Chetak 35 series E scooter Ex-showroom Price

  • Chetak 3503 – 1,10,210
  • Chetak 3502 – ₹ 1,20,000
  • Chetak 3501 – ₹ 1,32,000

டெக்பேக்கின் விலை தற்பொழுது அறிவிக்கப்படவில்லை.

2025 பஜாஜ் சேத்தக் 35 நுட்பவிபரங்கள்

Chetak Specs Chetak 3501/Chetak 3502/ Chetak 3503
மோட்டார்
வகை எலெக்ட்ரிக்
மோட்டார் வகை BLDC மோட்டார்
பேட்டரி 3.5 Kwh Lithium ion
அதிகபட்ச வேகம் 73 Km/h (63km/h w/o techpac)
அதிகபட்ச பவர் 4.0 KW Nominal/ 4.2 kw Peak
அதிகபட்ச டார்க் 16.2 Nm
அதிகபட்ச ரேஞ்சு 153Km per charge (IDC Claimed)
சார்ஜிங் நேரம் 3.25 மணி நேரம் (0-80%)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டியூப்லெர்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
ரைடிங் மோட் Eco, Sports
சஸ்பென்ஷன்
முன்பக்கம் ஒற்றைப் பக்க லிங்க்
பின்பக்கம் மோனோஷாக்
பிரேக்
முன்புறம் டிஸ்க்/டிரம்
பின்புறம் டிரம் (with CBS)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர்  90/90-12  ட்யூப்லெஸ்
பின்புற டயர்  90/100-12 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
ஹெட்லைட் எல்இடி
சார்ஜர் வகை Portable 950 W/ 650 W
கிளஸ்ட்டர் LCD/5 Inch TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர்
பரிமாணங்கள்
நீளம் 1860 mm
அகலம் 725 mm
உயரம் –
வீல்பேஸ் 1330 mm
இருக்கை உயரம் 760 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 mm
பூட் கொள்ளளவு 35 Litre
எடை (Kerb) 135 kg

பஜாஜ் சேத்தக் 35 நிறங்கள்

வேரியண்ட் வாரியாக நிறங்கள் மாறுபட்டாலும் பொதுவாகவே சேத்தக் இ ஸ்கூட்டரில் சிவப்பு, கருப்பு, ப்ளூ, பிஸ்தா பச்சை, மற்றம் ஹாசல் நட் என 5 நிறங்கள் கிடைக்கும்.

chetak 3502 Brooklyn Black
chetak 3502 Moon white
chetak 3502 Indigo blue
chetak 3502 Matte Coarse Grey
chetak 3501 pista green
chetak 3501 matte red
chetak 3501 Brooklyn Black
chetak 3501 Hazel Nut
chetak 3501 Indigo Metallic

2025 Bajaj Chetak 35 Rivals

ஏதெர் 450S, 450X, டிவிஎஸ் ஐக்யூப், ஹீரோ விடா வி2 , ஓலா எஸ்1, ஏதெர் ரிஸ்டா,  ஹோண்டா QC1, ஆக்டிவா e, ஆகியவற்றுடன் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளுகின்றது.

2025 Bajaj Chetak 35 electric Scooter on-Road Price in Tamil Nadu

2025 பஜாஜ் சேத்தக் 3501, 3502, 3503 என மூன்று ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Chetak 3503 – ₹ 1,18,710
  • Chetak 3502 – ₹ 1,29,451
  • Chetak 3501 – ₹ 1,41,345

(All Price on-road Tamil Nadu)

  • Chetak 3503 – ₹ 1,17,697
  • Chetak 3502 – ₹ 1,29,051
  • Chetak 3501 – ₹ 1,41,045

(All Price on-road Pondicherry)

bajaj chetak 3501

Faq chetak 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சேத்தக் 35 சீரிஸ் எலெக்ட்ரிக் மைலேஜ் எவ்வளவு ?

சேத்தக் 3501, 3502 ஸ்கூட்டர்களின் உண்மையான ரேஞ்ச் 110-120 கிமீ வழங்கலாம்

சேத்தக் 35 ஸ்கூட்டரின் பவர் மற்றும் டார்க் விபரம் ?

3 பேஸ் BLDC மோட்டார் பொருத்தப்பட்டு பவர் 4Kw வழங்குகின்றது. டார்க் பற்றி எந்த தகவலும் இல்லை.

பஜாஜ் சேத்தக் 35 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

சேத்தக் 35 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.41 லட்சம் வரை அமைந்தள்ளது.

சேத்தக் 35 மாடலை சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம்?

சேத்தக்கில் ஃபாஸ்ட் சார்ஜி ஆப்ஷன் இல்லை, 3501 வேரியண்டில் உள்ள 950 வாட்ஸ் ஆன்-போர்டு சார்ஜரின் மூலம் 0-80 % சார்ஜ் ஏற 3 மணி நேரமும், 3502 மாடல் 3.25 மணி நேரம் தேவைப்படும்.

பஜாஜின் சேத்தக் 35 சீரிஸ் போட்டியாளர்கள் யார் ?

டிவிஎஸ் ஐக்யூப், ஓலா எஸ்1, ஏதெர் ரிஸ்டா, 450S, 450X, ஹோண்டா QC1, ஆக்டிவா e, விடா வி2 ஆகியவற்றுடன் மற்ற மின்சார பேட்டரி ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளும்.

Chetak 35 e scooter Image Gallery

bajaj chetak 3501
2025 பஜாஜ் சேத்தக் 35 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை
bajaj chetak 3501 e scooter
பஜாஜ் சேத்தக் 3501
சேத்தக் 35 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
chetak 3502 Brooklyn Black
chetak 3502 Moon white
chetak 3502 Indigo blue
chetak 3501 pista green
chetak 3501 matte red
chetak 3501 Brooklyn Black
chetak 3501 Hazel Nut
chetak 3501 Indigo Metallic
chetak 3502 lcd cluster
chetak 3501 cluster
பல்சர் 125 பைக்
பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
பஜாஜ் பல்சர் N125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பு அம்சங்கள்
2024 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்
TAGGED:Bajaj Chetak 3501Bajaj Chetak 3502Bajaj Chetak 3503
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
New Hero Glamour X 125 on road price
Hero Motocorp
ஹீரோ கிளாமர் எக்ஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
2025 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350
Royal Enfield
2024 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2023 hero Super Splendor xtech Bike
Hero Motocorp
ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், Xtech பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
All new TVS Jupiter 110 2 1
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved