உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் என்ற பெருமையுடன் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
சிஎன்ஜி (Compressed Natural Gas) மற்றும் பெட்ரோல் என இரண்டு பயன்முறையிலும் இலகுவாக மாற்றிக் கொண்டு இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பெட்ரோல் டேங்க் 2 லிட்டர் கொள்ளளவுடன், சிஎன்ஜி டேங்க் 2 கிலோ கிராம் கொண்டுள்ளது.
125சிசி சந்தையில் உள்ள மற்ற மாடல்களுக்கும் சவால் விடுக்கும் வகையிலான டிசைனை பெற்றுள்ள ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மாடலில் வட்ட வடிவ எல்இடி ஹெட் லேம்ப் அல்லது வட்ட வடிவ ஹாலோஜன் பல்பு பொருத்தப்பட்ட மாடல்கள் என மூன்று விதமான வெரைட்டிகளில் கிடைக்கின்ற இந்த மாடலில் மிக அகலமான மற்றும் நீளமான இருக்கையானது கொடுக்கப்பட்டு அதன் அடிப்பகுதியில் சிஎன்ஜி டேங்க் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
125 சிசி என்ஜின் ஆனது சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு 9.5 hp பவர் மற்றும் 9.7Nm டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேகத்தில் கியர் பாக்ஸ் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இரண்டு லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 2 கிலோ சிஎன்ஜி சிலிண்டர் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இணைந்து தோராயமாக 330 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் லிங்க்டு மோனோஷாக் சஸ்பென்ஷன் பெற்றிருக்கின்ற இந்த மாடல் ஆனது 125சிசி சந்தையில் லிங்க்டூ மோனோஷாக் சஸ்பென்ஷன் பெரும் முதல் மாடலாகவும் விளங்குகின்றது.
இரு பக்க டயர்களிலும் 130மிமீ ட்ரம் பிரேக் அல்லது முன்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் என இரு விதமான ப்ரேக்கிங் ஆப்ஷன் உடன் கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டமானது சிறப்பான பிரேக்கிங் பெரும் வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
NG04 டிஸ்க் எல்இடி, NG04 டிரம் எல்இடி மற்றும் NG04 டிரம் என மூன்று விதமான வேரியண்டுகளை பெற்று முன்புறத்தில் 80/90 -17 (TL) மற்றும் பின்புறத்தில் 80/100 -16 (TL) அல்லது டாப் வேரியண்டில் முன்புறத்தில் 90/80 -17 (TL) மற்றும் பின்புறத்தில் 120/70 -16 (TL) பெற்றுள்ளது. டிஜிட்டல் கிளஸ்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி சார்ந்த வசதிகள் பெற்று கிரே, வெள்ளை, சிவப்பு நீலம், கிரே மற்றும் பிளாக் உள்ளது.
NG04 Disc LED – ₹ 1,10,000
NG04 Drum LED – ₹ 1,05,000
NG04 Drum only variant – ₹ 95,000
(ex-showroom)
என்ஜின் | |
வகை | ஏர் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | – |
Displacement (cc) | 124.58 cc |
Compression ratio | – |
அதிகபட்ச பவர் | 9.5 PS at 8,000 rpm |
அதிகபட்ச டார்க் | 9.7 Nm at 5000 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | டெர்லிஸ் ஃபிரேம் |
டிரான்ஸ்மிஷன் | கான்ஸ்டென்ட் மெஸ், 5 ஸ்பீடு |
கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | லிங்க்டூ மோனோஷாக் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் 240 mm/130mm டிரம் |
பின்புறம் | டிரம் 130 mm (with CBS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 90/80 -17 ட்யூப்லெஸ்/ 80/90 -17 |
பின்புற டயர் | 120/70-16 ட்யூப்லெஸ்/ 80/100-16 |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V-8Ah MF பேட்டரி |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் |
பரிமாணங்கள் | |
நீளம் | – |
அகலம் | – |
உயரம் | – |
வீல்பேஸ் | 1340 mm |
இருக்கை உயரம் | 825 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 170 mm |
எரிபொருள் கொள்ளளவு | 2KG சிஎன்ஜி மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் |
எடை (Kerb) | 149 kg |
ஃப்ரீடம் 125 மோட்டார்சைக்கிளில் கிரே, வெள்ளை, சிவப்பு நீலம், கிரே மற்றும் பிளாக் உள்ளது.
2024 பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
FREEDOM 125 CNG | EX-SHOWROOM | ON-ROAD PRICE |
---|---|---|
NG04 Drum | ₹.95,000 | ₹.1,13,651 |
NG04 Drum LED | ₹1,05,000 | ₹.1,24,781 |
NG04 Disc LED | ₹.1,10,000 | ₹.1,30,763 |
சிஎன்ஜி பைக்கிற்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லை என்றாலும் மற்றும் 125சிசி போட்டியாளர்களுடன் சந்தையை பகிர்ந்து கொள்கிறது. குறிப்பாக ஹோண்டா ஷைன் 125, ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், மற்றும் கிளாமர் உள்ளிட்ட மாடல்களுடன் பல்சர் 125 உள்ளது
125cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 9.7PS பவர் மற்றும் 9.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
சிஎன்ஜி பைக்கிற்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லை என்றாலும் மற்றும் 125சிசி போட்டியாளர்களுடன் சந்தையை பகிர்ந்து கொள்கிறது.
இரண்டு லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 2 கிலோ சிஎன்ஜி சிலிண்டர் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இணைந்து தோராயமாக 330 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும்
ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மாடலின் டாப் ஸ்பீடு மணிக்கு 91கிமீ ஆகும்.
பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ₹1.14 லட்சம் முதல் ரூ.1.31 லட்சம் வரை உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…