Automobile Tamilan

2023 ஹீரோ கிளாமர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கிளாமர் 125 பைக்கின் என்ஜின், வசதிகள், தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை, மைலேஜ்,  நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

2023 Hero Glamour 125

ஹீரோ நிறுவனம் கிளாமர் மாடலில் கிளாமர் 125, புதிய கிளாமர் 125, கிளாமர் கேன்வாஸ் மற்றும் கிளாமர் எக்ஸ்டெக் என மொத்தமாக 4 பிரிவுகளில் டிரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான பிரேக்கிங் பெற்று 8 வேரியண்டுகளாக விற்பனை செய்யப்படுகின்றது. கேன்வாஸ் என்பது கருப்பு நிறத்தை மட்டும் பெற்ற மாடலாகும்.

முந்தைய மாடலை அடிப்படையாக கொண்ட கிளாமர் 125 சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நான்கு பிரிவுகளில் பொதுவாக, OBD2 மற்றும் E20 அம்சத்தை பெற்ற அதே 124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7,500 rpm-ல் 10.7 bhp பவர் மற்றும் 6,000rpm-ல் 10.6 Nm டார்க் பெற்ற பைக்கில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

எல்இடி ஹெட்லேம்ப் & டெயில் லைட் கொண்ட புதிய கிளாமர், கிளாமர் கேன்வாஸ் என இரண்டும் செமி அனலாக் கிளஸ்ட்டர் பெற்றுள்ளது. கிளாமர் எக்ஸ்டெக் மாடல் எல்இடி ஹெட்லைட் பெற்று ப்ளூடூத் கனெக்ட்டிவ் வசதிகளை வழங்கும் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றுள்ளது.

அடுத்த கிளாமர் 125 மாடல் ஹாலஜென் ஹெட்லைட் கொண்டு டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று நிகழ்நேர மைலேஜ், குறைந்த எரிபொருள் அறிகுறி போன்ற தகவல்களைக் காட்டுகிறது.

பொதுவாக, டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்கு மற்றும் பின்புற ட்வீன் ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. 18-இன்ச் அலாய் வீல் கொண்டுள்ள இந்த பைக்கில் 80/100-பிரிவு முன்புற டயரும் மற்றும் 100/80-பிரிவு பின்புற டியூப்லெஸ் டயர் உள்ளது. முன்புற டயரில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் மற்றும் பின்புற டயரில் 130 மிமீ டிரம் இணைக்கபட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை கொடுத்துள்ளது.

புதிய கிளாமர் 125, கேன்வாஸ், எக்ஸ்டெக் பைக்கின் பரிமாணங்கள் 2051 மிமீ நீளம், 743 மிமீ அகலம், மற்றும் 1074 மிமீ உயரம் கொண்ட மாடலின் வீல்பேஸ் 1273 மிமீ , இருக்கை உயரம் 798 ஆகவும், கிரவுண்ட் கிளியரண்ஸ் 180 மிமீ பெற்று 10 லிட்டர் டேங்க் கொண்டு 123 கிலோ எடை டிஸ்க் மாடல் பெற்றுள்ளது.

கிளாமர் 125 பைக்கின் பரிமாணங்கள் 2042 மிமீ நீளம், 742 மிமீ அகலம், மற்றும் 1090 மிமீ உயரம் கொண்ட மாடலின் வீல்பேஸ் 1267 மிமீ , இருக்கை உயரம் 790 ஆகவும், கிரவுண்ட் கிளியரண்ஸ் 170 மிமீ பெற்று 10 லிட்டர் டேங்க் கொண்டு 122.5 கிலோ எடை டிஸ்க் மாடல் பெற்றுள்ளது.

(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

2023 ஹீரோ கிளாமர் 125 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை ஏர் ஆயில் கூல்டு, 4 stroke
Bore & Stroke 53.5 mm x 55.5 mm
Displacement (cc) 124.8 cc
Compression ratio 10:01
அதிகபட்ச பவர் 11.2 hp (8.37Kw) at 7500 rpm
அதிகபட்ச டார்க் 11.2 Nm  at 6000 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டைமண்ட் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 5 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 240/ 130 டிரம் mm (IBS)
பின்புறம் 130 mm டிரம்
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 80/100-18 ட்யூப்லெஸ்
பின்புற டயர் 100/80-18 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V 4.0Ah MF
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 2051 mm/ 2042 mm (glamour)
அகலம் 743 mm / 720 mm (drum)
உயரம் 1,074 mm/1,090 mm
வீல்பேஸ் 1,273 mm/ 1267 mm
இருக்கை உயரம் 780 mm/798 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 180 mm/170 mm
எரிபொருள் கொள்ளளவு 10 litres
எடை (Kerb) 123 kg (Disc) 122 kg (drum)

2023 ஹீரோ கிளாமர் 125 நிறங்கள்

Glamour 125 ஆனது கருப்பு, சிவப்பு மற்றும் நீலம் ஆகும்.

Glamour 125 Xtech மாடல் சிவப்பு, கிரே, நீலம் மற்றும் கருப்பு ஆகும்.

new glamour & canvas மாடல்கள் கருப்பு, சிவப்பு, நீலம், கோல்டு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை பெறுகின்றது.

2023 Hero Glamour 125 on-Road Price Tamil Nadu

2023 ஹீரோ கிளாமர் 125 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

2023 ஹீரோ கிளாமர் 125 ஆன்-ரோடு விலை

(All prices on-road Tamil Nadu)

2023 Hero Glamour 125 rivals

ஹோண்டா SP125, டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 பைக்குகளுடன் நேடியாக சந்தை பகிர்ந்து கொள்ளுகின்ற ஹீரோ கிளாமர் 125 பைக்கின் மற்ற போட்டியாளர்களாகவும் ஷைன் 125, சூப்பர் ஸ்பிளெண்டர் 125 மாடல்களும் உள்ளன.

Faqs About Hero Glamour 125

ஹீரோ கிளாமர் 125 பைக் என்ஜின் விபரம் ?

OBD2 மற்றும் E20 அம்சத்தை பெற்ற அதே 124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7,500 rpm-ல் 10.7 bhp பவர் மற்றும் 6,000rpm-ல் 10.6 Nm டார்க் பெற்ற பைக்கில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

ஹீரோ கிளாமர் 125 பைக் மைலேஜ் எவ்வளவு ?

கிளாமர் 125 பைக்கின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 54 கிமீ முதல் 58 கிமீ வரை கிடைக்கின்றது.

ஹீரோ கிளாமர் 125 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

கிளாமர் 125 பைக் ஆன்-ரோடு விலை ரூ.99,168 முதல் ரூ.1,13,898 வரை உள்ளது.

ஹீரோ கிளாமர் vs புதிய கிளாமர் vs கிளாமர் எக்ஸ்டெக் ?

பழைய டிசைன் வடிவமைப்பினை கிளாமர் 125 பெற்று கிளஸ்ட்டர் டிஜிட்டலாக உள்ளது. புதிய கிளாமர் 125 புதிய டிசைன் மற்றும் செமி அனலாக் கிளஸ்ட்டரும், எக்ஸ்டெக் புதிய வடிவமைப்புடன் கனெக்ட்டிவ் வசதிகளை பெற்றுள்ளது.

ஹீரோ கிளாமர் 125 போட்டியாளர்கள் யார் ?

ஹோண்டா SP125, டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 பைக்குகளுடன் நேடியாக சந்தை பகிர்ந்து கொள்ளுகின்ற ஹீரோ கிளாமர் 125 பைக்கின் மற்ற போட்டியாளர்களாகவும் ஷைன் 125, சூப்பர் ஸ்பிளெண்டர் 125 மாடல்களும் உள்ளன.

ஹீரோ Glamour 125 image gallery

 

Exit mobile version