இந்தியாவின் 125cc சந்தையில் க்ரூஸ் கண்ட்ரோல் பெற்ற ஹீரோ கிளாமர் X 125 பைக்கின் விலை, நிறங்கள், மைலேஜ், முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
2025 Hero Glamour X 125
மிகவும் நவீனத்துவமான வசதிகளை பெற்றுள்ள கிளாமர் எக்ஸில் முதன்முறையாக ஹீரோவின் க்ரூஸ் கண்ட்ரோல் மாடல் மட்டுமல்லாமல் இந்தியாவின் விலை குறைந்த ICE ரக க்ரூஸ் கண்ட்ரோல் மோட்டார்சைக்கிளாக விளங்கும் கிளாமர் எக்ஸ் Smooth Power Response Instant New Torque and Engine Balancer Technology எனப்படுகின்ற SPRINT EBT 124.7cc எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8,250 rpm-ல் 11.4 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.4 Nm டார்க் பெற்ற பைக்கில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் உள்ளது.
கூடுதலாக AERA டெக் எனப்படுகின்ற க்ரூஸ் கண்டரோல் வசதியுடன் ஈக்கோ, ரோடு மற்றும் பவர் என மூன்று ரைடிங் மோடிகளை கொண்டுள்ளது.
- Glamour X Drum – ₹ 89,999
- Glamour X Disc Cruise Control – ₹ 99,999
(Ex-showroom)
Hero Glamour X on-Road Price in Tamil Nadu
புதிய ஹீரோ கிளாமர் எக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி உட்பட மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
- Glamour X Drum – ₹ 1,04,986
- Glamour X Disc Cruise Control – ₹ 1,16,897
(All Price On-road Tamil Nadu)
- Glamour X Drum – ₹ 1,01,478
- Glamour X Disc Cruise Control – ₹ 1,11,879
(All on-road price pondicherry )
ஹீரோ AERA Tech என்றால் என்ன ?
ஹீரோவின் புதிய ரைட் பை வயர் மூலம் க்ரூஸ் கண்ட்ரோல் எனப்படுகின்ற நீண்ட தொலைவு சீரான வேகத்தில் பயணிக்க ஏற்ற வகையிலான தொழில்நுட்பத்திற்கு Advanced Electronic Ride Assist (AERA) என அழைக்கின்றது. ஆக்சிலேரேட்டரை தொடர்ந்து இயக்காமல் குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்க உதவுகின்ற AERA டெக்கின் மூலம் சிறப்பான மைலேஜ் வழங்கும் வேளையில், ரைடர்களுக்கு அதிக சிரத்தை இல்லாத பயணத்தை வழங்குகின்றது.
பேனிக் பிரேக் அலர்ட், 4.2 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் கலர் TFT முறையில் வழங்கி பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் பெறுவதுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், எரிபொருள் சிக்கனம், உட்பட சுமார் 60க்கு மேற்பட்ட வசதிகளை ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது பெறக்கூடும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மற்ற அம்சங்களில் டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்கு மற்றும் பின்புற ட்வீன் ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. 18-இன்ச் அலாய் வீல் கொண்டுள்ள கிளாமர் எக்ஸில் 80/100-பிரிவு முன்புற டயரும் மற்றும் 100/80-பிரிவு பின்புற டியூப்லெஸ் டயர் உள்ளது. முன்புற டயரில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் மற்றும் பின்புற டயரில் 130 மிமீ டிரம் இணைக்கபட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை கொடுத்துள்ளது.
எல்இடி புராஜெக்டர் ஹெட்லேம்ப் பெற்றுள்ள நிலையில் டாப் டிஸ்க் வேரியண்டில் எல்இடி டெயில் விளக்குகள் உள்ளன, ஆனால் டிரம் வேரியண்டில் வழக்கமான பல்புகள் இடம்பெற்றுள்ளன.
2026 ஹீரோ கிளாமர் எக்ஸ் நிறங்கள்
மெட்டாலிக் நெக்சஸ் நீலம், மேட் மெட்டாலிக் சில்வர், கேண்டி பிளேசிங் சிவப்பு, பிளாக் பேர்ல் சிவப்பு, பிளாக் டீல் நீலம் என 5 நிறங்களை பெற்றுள்ளது.
Hero Glamour X 125 Rivals
125சிசி சந்தையில் உள்ள ஹோண்டா எஸ்பி 125, சிபி 125 ஹார்னெட், பல்சர் 125, பல்சர் என்125, பல்சர் என்எஸ் 125, மற்றும் டிவிஎஸ் ரைடர் ஆகிவற்றை எதிர்கொள்ளுகின்றது.
Faqs ஹீரோ கிளாமர் எக்ஸ்
ஹீரோ கிளாமர் X 125 பைக் என்ஜின் விபரம் ?
124.7cc ஏர்-கூல்டு ஒற்றை சிலிண்டர் எஞ்சின் 8,250 rpm-ல் 11.4 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.4 Nm டார்க் பெற்ற பைக்கில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் உள்ளது.
கிளாமர் X பைக்கின் ஆன்-ரோடு விலை விபரம் ?
ஹீரோவின் கிளாமர் X 125 ஆன்-ரோடு விலை ரூ.1.06 லட்சம் முதல் ரூ.1.17 லட்சத்திற்குள் அமைந்துள்ளது.
ஹீரோ கிளாமர் X 125யின் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளதா ?
ரைட் பை வயருடன் ஈக்கோ, பவர் மற்றும் டர்போ என மூன்று மோடுகளுடன் AERA (Advanced Electronic Ride Assist) எனப்படும் க்ரூஸ் கண்ட்ரோல் நுட்பத்தை பெற்றதாக அமைந்துள்ளது
கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார் ?
ஹோண்டா எஸ்பி 125, சிபி 125 ஹார்னெட், பல்சர் 125, பல்சர் என்125, பல்சர் என்எஸ் 125, மற்றும் டிவிஎஸ் ரைடர் போன்றவை உள்ளது.
2026 ஹீரோ கிளாமர் 125 X பைக்கின் மைலேஜ் விபரம் ?
ஹீரோ நிறுவன கிளாமர் 125 X மைலேஜ் லிட்டருக்கு 65 கிமீ வழங்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹீரோ கிளாமர் X 125 நுட்பவிபரங்கள்
Specifications | Hero Glamour X 125 |
---|---|
என்ஜின் வகை | Air-cooled, 4-stroke, Single cylinder OHC |
என்ஜின் Displacement | 124.7 cc |
அதிகபட்ச பவர் | 8.5 kW (11.40 PS) @ 8250 rpm |
அதிகபட்ச டார்க் | 10.4 Nm @ 6500 rpm |
ஸ்டார்டர் முறை | கிக்/செல்ஃப் |
Fuel System | Fi |
டிரான்ஸ்மிஷன் | 5-speed constant mesh |
கிளட்ச் | Multi-plate wet |
சேஸ் | Diamond Type |
முன்புற சஸ்பென்ஷன் | டெலிஸ்கோபிக் ஃபோர்க் |
முன்புற சஸ்பென்ஷன் | இரட்டை ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் |
டயர் அளவு | Front: 80/100 – 18, Rear: 80/100 – 18 |
டயர் | Tubeless |
பிரேக் | முன்புறம்; டிரம்,டிஸ்க் பின்புறம்; டிரம் |
பிரேக் அளவு | முன்புறம்; 130மிமீ டிரம்,240மிமீ டிஸ்க் பின்புறம்; டிரம் 130மிமீ |
Wheel Type | அலாய் |
வீல்பேஸ் | 1267 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 170 mm |
Kerb Weight | 125.5 kg/127 Kg (Disc) |
நீளம் | 2045 mm |
அகலம் | 796 mm |
உயரம் | 1126 mm |
Fuel Tank Capacity | 10 liters |
மைலேஜ் | 65 km/l (ARAI) |
மைலேஜ் – User Reported | 55-58 Kmpl |
நிறங்கள் | மெட்டாலிக் நெக்சஸ் ப்ளூ, மேட் மெட்டாலிக் சில்வர், கேண்டி பிளேசிங் ரெட், பிளாக் பேர்ல் ரெட், பிளாக் டீல் ப்ளூ |
வசதிகள் | கலர் TFT கிளஸ்ட்டர், பேனிக் பிரேக் அலர்ட், ரைட் மோடு உடன் க்ரூஸ் கண்ட்ரோல், i3S டெக்னாலஜி (ஐடில் ஸ்டாப் மற்றும் ஸ்டார்ட் சிஸ்டம்) |