Automobile Tamilan

ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹீரோ ஜூம் 160

மேக்ஸி ஸ்டைல் பெற்ற ஸ்கூட்டராக விளங்கும் ஹீரோ ஜூம் 160 (Xoom 160) ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

2025 Hero Xoom 160

பீரிமியம் ஸ்கூட்டர் சந்தையில் ஹீரோ நிறுவனம் வெளியிட்டுள்ள மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டரில் பல்வேறு நவீனத்துவமான அம்சங்களுடன் புதிய ஜூம் பிராண்டின் கீழ் கிடைக்கின்ற 156சிசி என்ஜின் கொண்டு போட்டியாளர்களை விட பிரீமியம் வசதிகளுடன் விளங்குகின்றது.

ஜூம் 160 ஸ்கூட்டரில் 156சிசி லிக்யூடு கூல்டு 4 வால்வுகளை பெற்ற SOHC என்ஜின் பொருத்தப்பட்டு 8,000rpm-ல் அதிகபட்சமாக 14.6 bhp பவர் மற்றும் 6,000rpm-ல் 14 NM டார்க் வழங்குகின்றது. இதில் தொடர்ந்து சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகின்றது.

(Ex-showroom)

2025 Hero Xoom 160 on-Road Price Tamil Nadu

ஹீரோ மோட்டோகார்ப் ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, தரும்புரி, நாகர்கோவில் என மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடும்.

(on-road Price in Tamil Nadu)

(on-road Price in Pondicherry)

மிக உறுதியான ஸ்டீல் ஃபிரேம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஜூம் 160 ஸ்கூட்டரில் மிக நேர்த்தியான எல்இடி  விளக்குகளுடன் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷனை பெற்ற ஜூம்  ஸ்கூட்டரின் பரிமாணங்கள் நீளம் 1983மிமீ, அகலம் 772மிமீ மற்றும் உயரம் 1214 மிமீ கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 1348 மிமீ பெற்று 155மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டுள்ளது.

இந்த மேக்ஸி ஸ்டைல் மாடலில் 7 லிட்டர் பெட்ரோல் கலன் கொள்ளளவு பெற்று, 142 கிலோ எடை கொண்டு முன்பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை கொண்டு 14 அங்குல வீல் பெற்றுள்ளது. டீயூப்லெஸ் டயர் பொருத்தப்பட்டு முன்புறத்தில் 120/70 – 14 மற்றும் பின்புறத்தில் 140/60 – 14 டயர் உள்ளது.

குறிப்பாக இந்த ஸ்கூட்டர் அகலமான பேட்டர்ன் கொண்ட டயருடன் 14 அங்குல வீல், முழுமையான எல்இடி லைட்டிங், எல்இடி சிக்யூன்சல் லைட்டிங், ஒளிரும் வகையிலான ஸ்டார்டிங் சுவிட்ச் ஆகியவற்றுடன் பூட் திறக்க மற்றும் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய கீ லெஸ் இக்னிஷன் ஸ்மார்ட் கீ வழங்கப்பட்டுள்ளது.

2025 ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரில் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகள கிடைக்கின்றது. கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்டு வழங்கப்பட்டுள்ளது.

 

 

XOOM 160 வாங்கலாமா ?

மேக்ஸி ஸ்டைல் தோற்றத்தில் முரட்டுத்தனமான டிசைன் வெளிப்பாடினை பெற்ற ஜூம் 160 வடிவமைப்பிற்கு ஹீரோ மிகப்பெரிய சவாலினை எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளது. விலை, டிசைன், என்ஜின் பெர்ஃபாமென்ஸ் என அனைத்தும் மிக சிறப்பான வகையில் அமைந்திருப்பதுடன் டூரிங் அனுபவத்துக்கு ஏற்றதாகவும், 14 அங்குல வீலுடன் அகலமான பிளாக் பேட்டர்ன் பெற்ற டயர் கவருகின்றது.

இவ்வளவு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள மாடலில் TFT கிளஸ்ட்டர் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், வலுவான போட்டியாளரான ஏரோக்ஸ் 155 மாடலை எதிர்கொள்வதுடன் என்டார்க் 125 சவாலாக உள்ளது.

ஹீரோ ஜூம் 160 நுட்பவிரங்கள்

என்ஜின்
வகை லிக்யூடு கூல்டு, 4 stroke, SOHC
Bore & Stroke
Displacement (cc) 156 cc
Compression ratio 10.0:1
அதிகபட்ச பவர் 10.9 kw (14.6 bhp) at 8000 rpm
அதிகபட்ச டார்க் 14Nm @ 6,000rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
கிளட்ச் டிரை டைப்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் டூயல் ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 240மிமீ (ABS)
பின்புறம் டிரம் 130 mm
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 120/70 – 14 ட்யூப்லெஸ்
பின்புற டயர் 140/60 – 14  ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 112V- 6Ah /ETZ-7 MF பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 1983 mm
அகலம் 772 mm
உயரம் 1217 mm
வீல்பேஸ் 1348 mm
இருக்கை உயரம் 787 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 155 mm
எரிபொருள் கொள்ளளவு 7 litres
எடை (Kerb) 142 kg

ஹீரோவின் ஜூம் 160 நிறங்கள்

சிவப்பு, கிரே, வெள்ளை, மற்றும் பச்சை என 4 விதமான நிறங்களை மட்டும் கொண்டதாக ஜூம் 160 கிடைக்கின்றது.

2025 Hero Xoom 160 rivals

2025 ஹீரோ ஜூம் 160சிசி ஸ்கூட்டருக்கு போட்டியாக யமஹா ஏரோக்ஸ் 155, ஏப்ரிலியா SXR 160 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.

Faqs About Hero xoom 160

ஹீரோ ஜூம் 160 என்ஜின் விபரம் ?

156cc லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 14.6 bhp பவர் மற்றும் 6,000rpm-ல் 14 NM டார்க் வழங்குகின்றது.

ஹீரோ ஜூம் 160 மைலேஜ் எவ்வளவு ?

ஜூம் 160 ஸ்கூட்டரின் மைலேஜ் லிட்டருக்கு 38-40 கிமீ கிடைக்கலாம்.

ஹீரோ Xoom 160 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1.69 லட்சம் ஆக உள்ளது.

ஜூம் 160 ஸ்கூட்டரின் முக்கிய வசதிகள் ?

மேக்ஸி ஸ்டைல் ஜூம் 160ல் கீலெஸ் இக்னிஷன், பூட் திறக்கும் வசதி, 14 அங்குல வீல், எல்இடி விளக்குகள் என பலவற்றை கொண்டுள்ளது.

2025 ஹீரோ ஜூம் 160 போட்டியாளர்கள் ?

இந்திய சந்தையில் ஜூம் 160 மாடலுக்கு போட்டியாக ஏரோக்ஸ் 155 மற்றும் ஏப்ரிலியா SXR 160 உள்ளது.

2025 Hero xoom 160 Scooter Image Gallery

Last Updated -Price GST 2.0 tax structure 22/09/2025

Exit mobile version