Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Hero Motocorp

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

By MR.Durai
Last updated: 25,April 2025
Share
4 Min Read
SHARE

hero xtreme 160r 4v

ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள 4 வால்வுகளை பெற்ற எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் மாடலின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

Contents
  • 2025 Hero Xtreme 160R 4V
  • ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி நுட்பவிரங்கள்
  • ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி நிறங்கள்
  • 2025 Hero Xtreme 160R 4V On-road Price in Tamil Nadu
  • Hero Xtreme 160R 4V Rivals
  • Faq Hero Xtreme 160R 4V
  • 2025 Hero Xtreme 160R 4V Image Gallery

2025 Hero Xtreme 160R 4V

முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி மாடலை அடிப்படையாக கொண்ட 4 வால்வுகளை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி, வசதிகள் யூஎஸ்டி ஃபோர்க் உள்ளிட்ட அம்சங்களை பெற்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கில் ஸ்டார்ண்டர்டு, கனெக்டேட் மற்றும் புரோ என மூன்று விதமான வேரியண்ட் பெற்று பொதுவாக, 163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 16.9 hp பவர் மற்றும் 6500rpm-ல் 14.5 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

அனைத்து வேரியண்டுகளிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் 276 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 220 மிமீ டிஸ்க் உள்ளது.  ட்யூபெலெஸ் டயர் இடம்பெற்று முன்பக்கத்தில் 100/80-17 மற்றும் 130/80-17 பின்பக்கத்தில் உள்ளது.

ஸ்டாண்டர்டு மற்றும் கனெக்டேட் என இரண்டும் 37mm டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்பக்கத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பெற்று ஒற்றை இருக்கையுடன் புதிதாக பிளேசிங் ஸ்போர்ட்ஸ் சிவப்பு மற்றும் மேட் ஸ்லாட் கருப்பு என இரண்டு நிறங்களை கொண்டுள்ளது.

கனெக்டேட் வேரியண்டில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ப்ளூடூத் இணைப்புடன் ஹீரோவின் டெலிமாடிக்ஸ் அம்சத்தை ஹீரோ கனெக்ட் 2.0 என்ற பெயரில் பெற்றுள்ளது. டெலிமாடிக்ஸ் செயல்பாடுகள் வாகன கண்காணிப்பு, இம்மொபைல்சேஷன், வாகனம் கண்டறிதல், பேனிக் எச்சரிக்கை, அவசரகால எச்சரிக்கை, ஓவர் ஸ்பீட் அலர்ட், திருட்டு எச்சரிக்கை, ஜியோஃபென்ஸ் எச்சரிக்கை, வாகன ஆரோக்கியம் மற்றும் பலவற்றை பெற்றுள்ளது. ஒற்றை மேட் ஸ்லேட் பிளாக் நிறத்தில் மட்டும் கிடைக்கின்றது.

எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி புரோவில் கோல்டு நிறத்திலான 37 mm KYB அப்சைடு டவுன் ஃபோர்க், ஸ்பிளிட் இருக்கையுடன் வருகிறது. முந்தைய கனெக்டேட் வேரியண்டின் மற்ற வசதிகளை பெறுகின்றது. மற்ற இரண்டு வகைகளை விட எடை கூடுதலாக 145 கிலோ உள்ளது. மேட் ஸ்லேட் பிளாக் அல்லது ஒரு நியான் ஷூட்டிங் ஸ்டார் என இரண்டு நிறங்களை தேர்வு செய்யலாம்.

202 எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக் மாடலின் பரிமாணங்கள் 2029 மிமீ நீளம், 793 மிமீ அகலம் மற்றும் 1052 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,333 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 795 மிமீ மற்றும் 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்  கொண்டுள்ளது.

  • XTREME 160R Split 4V DISC – ₹ 1,37,000
  • XTREME 160R 4V DISC – ₹ 1,39,000
  • XTREME 160R Split 4V DISC OBD-2B – ₹ 1,38,600
  • XTREME 160R 4V SINGLE DISC OBD2B – ₹ 1,40,600
  • XTREME 160R SINGLE DISC – ₹ 1,11,611
  • XTREME 160R SINGLE DISC OBD2B – ₹ 1,13,211

(எக்ஸ்-ஷோரூம்)

xtreme 160r 4v price

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி நுட்பவிரங்கள்

என்ஜின்
வகை ஏர் ஆயில் கூல்டு, 4 stroke
Bore & Stroke 66.5 mm x 497 mm
Displacement (cc) 163.2 cc
Compression ratio 10.1:1
அதிகபட்ச பவர் 16.9 hp at 8500 rpm
அதிகபட்ச டார்க் 14.6 Nm  at 6500 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டபுலெர் டைமண்ட் டைப்
டிரான்ஸ்மிஷன் கான்ஸ்டென்ட் மெஸ், 5 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்/KYB 37mm USD
பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 276 mm (ABS)
பின்புறம் டிஸ்க் 228 mm
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 100/80-17 ட்யூப்லெஸ்
பின்புற டயர் 130/80-17 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V-6Ah (VRLA)
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 2029 mm
அகலம் 793 mm
உயரம் 1052 mm
வீல்பேஸ் 1333 mm
இருக்கை உயரம் 795 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 mm
எரிபொருள் கொள்ளளவு 12 litres
எடை (Kerb) 144 kg (STD/Connected) – 145 kg pro

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி நிறங்கள்

xtreme 160r variants exlpained
xtreme 160r 4v
xtreme 160r 4v price
xtreme 160r 4v blazing red

 

2025 Hero Xtreme 160R 4V On-road Price in Tamil Nadu

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்,  எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • XTREME 160R Split 4V DISC – ₹ 1,68,152
  • XTREME 160R 4V DISC – ₹ 1,70,621
  • XTREME 160R Split 4V DISC OBD-2B – ₹ 1,69,900
  • XTREME 160R 4V SINGLE DISC OBD2B – ₹ 1,72,045
  • XTREME 160R SINGLE DISC – ₹ 1,38,580
  • XTREME 160R SINGLE DISC OBD2B – ₹ 1,41,811

(Tamil Nadu on-Road Price)

Hero Xtreme 160R 4V Rivals

இந்த பைக்கிற்கு போட்டியாளர்களாக எக்ஸ்ட்ரீம் 160ஆர், பஜாஜ் பல்சர் N160, பல்சர் NS160, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160R 4V, அப்பாச்சி RTR 160 2V, யமஹா FZ-S FI, மற்றும் சுசூகி ஜிக்ஸர் ஆகியவை உள்ளன.

மேலும் படிக்க – ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V உடன் போட்டியாளர் ஒப்பீடு

Faq Hero Xtreme 160R 4V

ஹீரோ Xtreme 160R 4V என்ஜின் விபரம் ?

Xtreme 160R 4V பைக்கில் 163.2cc ஏர் ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 16.9 hp பவர் மற்றும் 14.5 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது

ஹீரோ Xtreme 160R 4V பைக்கின் ஆன்-ரோடு விலை ?

தமிழ்நட்டின் Xtreme 160R ஆன்ரோடு விலை ரூ.1.39 லட்சம் முதல் ரூ.1.73 லட்சம் வரை உள்ளது.

Xtreme 160R 4V போட்டியாளர்கள் யார்?

எக்ஸ்ட்ரீம் 160ஆர், பஜாஜ் பல்சர் N160, பல்சர் NS160, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160R 4V, அப்பாச்சி RTR 160 2V, யமஹா FZ-S FI, மற்றும் சுசூகி ஜிக்ஸர் ஆகியவை உள்ளன.

2025 Hero Xtreme 160R 4V Image Gallery

xtreme 160r 4v blazing red
xtreme 160r variants exlpained
hero xtreme 160r 4v fr
xtreme 160r 4v
hero-xtreme-160r-4v
xtreme 160r 4v price
hero xtreme 160r 4v
xtreme 160r 4v rear view
hero xtreme 160r 4v rear view
hero xtreme 160r 4v side
hero xtreme 160r 4v rear
xtreme 16r 4v in tamil
New Hero Glamour X 125 on road price
ஹீரோ கிளாமர் எக்ஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ஹீரோ ஜூம் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
TAGGED:Hero Xtreme 160R 4V
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஓலா S1 X எலக்ட்ரிக்
Ola Electric
ஓலா S1 X, S1 X+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
hero motocorp passion plus
Hero Motocorp
ஹீரோ பேஷன் பிளஸ் பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
2024 hero glamour 125
Hero Motocorp
2025 ஹீரோ கிளாமர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 Royal Enfield Guerrilla 450 new
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved