ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவின் (HMSI) ஷைன் 100 டிஎக்ஸ் (Honda Shine 100DX) பைக்கின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளரர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
Honda Shine 100DX on-Road price in Tamil nadu
ஹோண்டாவின் ஷைன் 100DX பைக்கின் விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, தரும்புரி, நாகர்கோவில் என மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடும்.
ஷைன் 100 டீலக்ஸ் ஆன்-ரோடு விலை ரூ.88,000க்குள் அமையலாம்.
2025 Honda Shine 100DX
முன்பாக விற்பனையில் உள்ள குறைந்த விலை ஷைன் 100 பைக்கின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள 2025 ஷைன் 100 டிஎக்ஸ் மாடலுக்கு புதிய 98.98cc என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7.61 hp குதிரைத்திறன் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட டைமண்ட் ஃபிரேம் சேஸ் கொடுக்கப்பட்டு 17 இன்ச் வீல் கொடுக்கப்பட்டுள்ள முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக் மாடலின் பரிமாணங்கள் 1,945 மிமீ நீளம், 754 மிமீ அகலம் மற்றும் 1,050 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,245 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 786 மிமீ மற்றும் 168 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.
டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று இந்த மாடலில் நிகழ் நேர மைலேஜ், எரிபொருள் அளவு, உட்பட சர்வீஸ் ரிமைண்டர் என பலவற்றை கொண்டுள்ளது.
103 கிலோ கெர்ப் எடை கொண்டுள்ள சைன் 100 மாடலில் முன்பக்கத்தில் 130 மிமீ டிரம் பிரேக் பெற்று, பின்பக்க டயரில் 130மிமீ டிரம் பிரேக் உடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் ஆனது இடம்பெற்றுள்ளது.
ஹோண்டா ஷைன் 100 டீலக்ஸ் பைக்கிற்கு போட்டியாக ஹீரோ HF 100, பஜாஜ் பிளாட்டினா 100, ஹீரோ HF டீலக்ஸ் மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் போன்றவை உள்ளன.
ஹோண்டா ஷைன் 100 டீலக்ஸ் நுட்பவிரங்கள்
Specification | Honda Shine 100DX |
---|---|
Engine | Air-cooled, 4-stroke, single cylinder |
Displacement | 98.98 cc |
பவர் | 7.61 bhp @ 7500 rpm |
டார்க் | 8.05 Nm @ 6000 rpm |
Fuel system | PGM-FI |
கியர்பாக்ஸ் | 4-speed constant mesh |
முன் சஸ்பென்ஷன் | டெலிஸ்கோபிக் ஷாக் அப்சார்பர் |
பின் சஸ்பென்ஷன் | ட்வீன் ஷாக் அப்சார்பர் |
முன்புற பிரேக் | 130 mm drum |
பின்புற பிரேக் | 110 mm drum |
முன்புற டயர் | 2.75 – 17 41P, Tubeless |
பின்புற டயர் | 3.00 – 17 50P, Tubeless |
எரிபொருள் கொள்ளளவு | 10 liters |
கெர்ப் எடை | 103 kg |
நீளம் | 1945 mm |
அகலம் | 754 mm |
உயரம் | 1050 mm |
வீல்பேஸ் | 1245 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 168 mm |
வசதிகள் | digital instrument cluster, side-stand with engine cutoff, esp technology |
Honda Shine 100DX colours
ஷைன் 100 டிஎக்ஸில் பேர்ல் இக்னியஸ் கருப்பு, இம்பீரியல் ரெட் மெட்டாலிக், அத்லெடிக் ப்ளூ மெட்டாலிக் மற்றும் ஜெனி கிரே மெட்டாலிக் என நான்கு நிறங்களை பெற்றுள்ளது.
Honda Shine 100DX Rivals
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ், ஹீரோ HF100, ஹீரோ HF டீலக்ஸ், ஹீரோ HF டீலக்ஸ் ப்ரோ பைக் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 போன்றவற்றுடன் வரவிருக்கும் புதிய ஹீரோ பேஷன் பிளஸ் 100 பைக்குகளை எதிர்கொள்ள உள்ளது.
FAQs about Honda Shine 100DX
2024 ஹோண்டா ஷைன் 100டிஎக்ஸ் ஆன்-ரோடு விலை விபரம் ?
ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக் ஆன்-ரோடு விலை ₹ 88,521 வரலாம்.
ஹோண்டா ஷைன் 100DX என்ஜின் பவர் எவ்வளவு ?
புதிய 98.98cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 7.28 bhp பவர் மற்றும் 8.05 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
2024 Honda shine 100 dx போட்டியாளர்கள் விபரம் ?
ஹீரோ ஸ்பிளெண்டர்+,HF100, HF டீலக்ஸ் பைக் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100
ஹோண்டா ஷைன் 100 dx பைக் மைலேஜ் எவ்வளவு ?
ஹோண்டா ஷைன் 100 டிஎக்ஸ் பைக் மைலேஜ் சராசரியாக 65-70 kmpl ஆகும்.