Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

by MR.Durai
17 March 2025, 2:51 pm
in Honda Bikes
0
ShareTweetSend

2025 honda sp125 bike

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் புதிய எஸ்பி 125 பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

2025 Honda SP125

புதிய SP125 பைக்கினை பொறுத்தவரை ஷைன் 125 பைக்கின் எஞ்சின் உட்பட சில அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களை பயன்படுத்திக் கொண்டு ஸ்போர்ட்டிவான தோற்ற வடிவமைப்பினை கொண்டு புதிய எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் என அனைத்தும் சிறிய மாற்றங்களுடன், புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் என பல்வேறு மாற்றங்களை 2025 மாடல் பெற்றுள்ளது.

புதிய BS6 இரண்டாம் கட்ட மாசு உமிழ்வுக்கு இணையான OBD2B மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ள HET (Honda Eco Technology) நுட்பத்தினை பெற்று 123.94cc, ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.8hp குதிரைத்திறன், 10.9Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2025 எஸ்பி 125 பைக்கில் கருப்பு, நீளம், கிரே, சிவப்பு மற்றும் சைரன் நீலம் என 5 வித நிறங்களை கொண்டு பரிமாணங்களில் 2,020 மிமீ நீளம், 785 மிமீ அகலம் மற்றும் 1,103 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,285 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 790 மிமீ மற்றும் 160 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்  கொண்டுள்ளது.

முன்புறத்தில் வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டு பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்று 18 அங்குல வீலுடன் முன்பக்கத்தில் 80/100-18M/C 47P மற்றும் பின்புறத்தில் 100/80-18M/C 53P டயருடன் இருபக்க டயர்களிலும் 240 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 130 மிமீ டிரம் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்றதாக கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் என இரு விதமான வேரியண்ட் கொண்டுள்ளது.

2025 மாடலில் மிக முக்கியமாக கிராபிக்ஸ் தவிர 4.2-இன்ச் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ள கிளஸ்ட்டரின் மூலம் ஹோண்டாவின் ரோடுசிங் ஆப் வாயிலாக இணைக்கும் பொழுது டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகளுடன் கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு ஆனிவெர்சரி எடிசனில் புதிய அலாய் வீல் மற்றும் பாடி கிராபிக்ஸ் உள்ளது.

  • SP125 Drum OBD-2B Rs. 96,086
  • SP125 Disc OBD-2B Rs. 99,999
  • SP125 anniversary edition Rs. 1,00,999

(Ex-showroom)

2025 honda sp125 led lights

Honda SP 125 on-Road Price Tamil Nadu

2025 ஹோண்டா எஸ்பி 125 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, தரும்புரி, நாகர்கோவில் என மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடும்.

  • SP125 Drum OBD-2B Rs. 1,13,098
  • SP125 Disc OBD-2B Rs. 1,17,796
  • SP125 anniversary edition Rs. 1,19,167

(All Prices on-road Tamil Nadu)

  • SP125 Drum OBD-2B Rs. 1,03,097
  • SP125 Disc OBD-2B Rs. 1,07,987
  • SP125 anniversary edition Rs. 1,09,567

(All Prices on-road Pondicherry)

honda sp125 Anniversary edition rear

ஹோண்டா எஸ்பி 125 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை ஏர் ஆயில் கூல்டு, 4 stroke
Bore & Stroke 50.0 X 63.1 mm
Displacement (cc) 123.94 cc
Compression ratio 10:01
அதிகபட்ச பவர் 10.8 hp (8Kw) at 7500 rpm
அதிகபட்ச டார்க் 10.9 Nm  at 6000 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டைமண்ட் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 5 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 276 mm (ABS)
பின்புறம் டிஸ்க் 220 mm / 130 mm டிரம்
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 80/100-18M/C 47P ட்யூப்லெஸ்
பின்புற டயர் 100/80-18M/C 53P ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V 4.0Ah MF
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 2020 mm
அகலம் 785 mm
உயரம் 1103 mm
வீல்பேஸ் 1285 mm
இருக்கை உயரம் 790 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 160 mm
எரிபொருள் கொள்ளளவு 11.2 litres
எடை (Kerb) 116 kg

ஹோண்டாவின் எஸ்பி125 நிறங்கள்

இக்னியஸ் பிளாக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், பேர்ல் சைரன் ப்ளூ, இம்பீரியல் ரெட் மெட்டாலிக் மற்றும் மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக் என ஐந்து விதமான நிறங்களில் 2025 மாடல் எஸ்பி125 கிடைக்கின்றது.

honda sp125 Anniversary edition
honda sp125 25th year Anniversary edition
honda sp125 Anniversary edition rear
2025 honda sp125 bike
2025 ஹோண்டா எஸ்பி 125
new 2025 honda sp125 gray mettalic
new 2025 honda sp125 blue
new 2025 honda sp125 black
honda sp125 bike
sp125 bike price

2025 Honda SP125 Rivals

இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், பல்சர் N125 பல்சர் NS125, ஹீரோ கிளாமர் 125, CB125 ஹார்னெட் மற்றும் டிவிஎஸ் ரைடர் 125 ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ளுகின்றது.

Faqs ஹோண்டா எஸ்பி125

2025 ஹோண்டா எஸ்பி 125 பைக்கின் ஆன்-ரோடு விலை பட்டியல் ?

2025 ஹோண்டா எஸ்பி125 பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ.1.12 லட்சம் முதல் ரூ.1.18 வரை அமைந்துள்ளது.

எஸ்பி 125 எஞ்சின் விபரம் .?

OBD2B மற்றும் E20க்கு ஆதரவான HET 123.94cc, ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.8hp குதிரைத்திறன், 10.9Nm டார்க் பெற்று ஐந்து வேக கியர்பாக்ஸுடன் உள்ளது.

2025 ஹோண்டா SP125 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

2025 ஹோண்டா SP125 பைக்கின் மைலேஜ் 56-59 கிமீ வழங்குகின்றது.

எஸ்பி 125 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், பல்சர் N125 பல்சர் NS125, ஹீரோ கிளாமர் 125, மற்றும் டிவிஎஸ் ரைடர் 125 ஆகியவற்றை நேரடியாக எஸ்பி 125 எதிர்கொள்ளுகின்றது.

எஸ்பி 125 பைக்கின் வேரியண்ட் விபரம் ?

டிரம் பிரேக்குடன் முன்புற டயர் அல்லது டிஸ்க்குடன் முன்புற டயர் பெற்று பின்புறத்தில் டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

Related Motor News

350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?

125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்

ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?

ஹீரோ கிளாமர் எக்ஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்

25 ஆண்டு கொண்டாட்ட ஹோண்டா ஆக்டிவா மற்றும் SP125 அறிமுகமானது

ஹோண்டா 125சிசி பைக்குகள்., CB125 ஹார்னெட் Vs SP125 Vs ஷைன்125 ஒப்பீடு

2025 Honda SP125 Bike Image Gallery

2025 honda sp125 bike
2025 ஹோண்டா எஸ்பி 125
2025 honda sp125 led lights
honda sp125 tft cluster
2025 honda sp125 bike
new 2025 honda sp125 black
new 2025 honda sp125 blue
new 2025 honda sp125 gray mettalic
new 2025 honda sp125 rear view
new 2025 honda sp125 side view
new 2025 honda sp125 front view
new 2025 honda sp125 front

last updated – 12/08/2025

Tags: 125cc BikesHonda 2wheelersHonda SP125
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

பிரீமியம் ஸ்போர்ட்டிவ் ஹோண்டா CB 125 ஹார்னெட் வெளியானது

ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2025 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan