Royal Enfield

ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

Spread the love

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரின் புதிய கொரில்லா 450 பைக்கின் சிறப்புகள் மைலேஜ் நிறங்கள் மற்றும் தமிழ்நாட்டில் ஆன் ரோடு விலை ரூ.2.89 லட்சம் முதல் துவங்குகின்ற பட்டியல் அறிந்து கொள்ளலாம்.

Royal Enfield Guerrilla 450

செர்பா 452 என்ஜின் பெற்ற புதிய ஹிமாலயன் 450 பைக்கை தொடர்ந்து அதே பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோட்ஸ்டெர் மாடல் பல்வேறு மாறுதல்களை கொண்டு மிகவும் நவீனத்துவமான வசதிகள் மற்றும் ரெட்ரோ தோற்ற அமைப்பினை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

452cc என்ஜின் பொருத்தப்பட்டு சிங்கிள் சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 40.02 ps பவர் மற்றும் 5,500rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.

கொரில்லா 450-யின் பரிமாணங்கள் நீளம் 2,090mm அகலம் 833mm மற்றும் உயரம் 1,125mm . அடுத்து வீல்பேஸ் 1,440mm மற்றும் 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் கெர்ப் எடை வெறும் 174 கிலோ கிராம் கொண்டுள்ள பைக்கில் இருக்கை உயரம் 780mm ஆக உள்ளது

ட்வின் ஸ்பார் ஸ்டீல் ஃபிரேம் உடன் முன்புறத்தில் 43mm டெலஸ்கோபிக் ஃபோர்க் 140mm பயணிக்கவும் மற்றும் பின்புறத்தில் 150mm பயணிக்கின்ற லிக்ங்டூவகை மோனோஷாக் அப்சார் கொண்ட ஸ்விங்கார்ம் இடம்பெற்றுள்ளது.

174 கிலோ கெர்ப் எடை கொண்டுள்ள கொரில்லா 450 பைக்கில் முன்புறத்தில் 120/70-R17 மற்றும் பின்புறத்தில் 160/60-R17 ட்யூப்லெஸ் டயர் கொடுக்கப்பட்டு, இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் பிரேக்கிங் சிஸ்டம் உடன்  ஈக்கோ ஏபிஎஸ் ஆன், ஈக்கோ ஏபிஎஸ் ஆஃப் பெர்ஃபாமென்ஸ் ஏபிஎஸ் ஆன் மற்றும் பெர்ஃபாமென்ஸ் ஏபிஎஸ் ஆஃப் ரைடிங் மோடுகளும் இடம்பெற்றுள்ளது.

கொரில்லா 450 பைக்கில் பிக்ஸ் பிரான்ஸ், ப்ரேவ் ப்ளூ, மஞ்சள் ரிப்பன், பிளேயா கருப்பு,கோல்டு டிப் மற்றும் சில்வர் என மொத்தமாக 6 நிறங்களில் கிடைக்கின்றது. Analogue வேரியண்டில் மீட்டியோர் 650 பைக்கில் உள்ளதை போன்ற செமி அனலாக் முறையிலான கிளஸ்ட்டர், கூடுதலான டர்ன்-பை-டர்ன் நேவிகேஷனுக்கு தனி கிளஸ்ட்டரும் உள்ளது. மற்ற Dash, Flash என இரண்டிலும் TFT கிளஸ்ட்டர்  ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனை இணைத்தால் டிரிப்பர் நேவிகேஷன் ஆனது கூகுள் மேப்ஸ் உடன் இணைக்கப்பட்டும், இசை, டாக்குமென்ட் சேமிப்பு பெறுவதுடன் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்படுகின்றது.

Royal Enfield Guerrilla 450 Price list

  • Analogue Guerrilla ரூ. 2,39,000
  • Dash Guerrilla ரூ.2,49,000
  • Flash Guerrilla ரூ. 2,54,000

(ex-showroom)

2025 Royal Enfield Guerrilla 450 on-Road Price Tamil Nadu

2024 ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450-யின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Analogue Guerrilla ரூ. 2,89,351
  • Dash Guerrilla ரூ.3,00,890
  • Flash Guerrilla ரூ. 3,06,876

(on-road price TamilNadu)

  • Analogue Guerrilla ரூ. 2,62,678
  • Dash Guerrilla ரூ.2,72,891
  • Flash Guerrilla ரூ. 2,77,976

(on-road price Pondicherry)

ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 நுட்பவிரங்கள்

என்ஜின்
வகை லிக்யூடு கூல்டு, 4 stroke, SOHC
Bore & Stroke 84 mm x 81.5 mm
Displacement (cc) 452 cc
Compression ratio 11.5:1
அதிகபட்ச பவர் 40.02 ps (29.44 KW) at 8000 rpm
அதிகபட்ச டார்க் 40 Nm  at 5500 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (eFI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் ட்வின் ஸ்பார் ஸ்டீல்
டிரான்ஸ்மிஷன் கான்ஸ்டென்ட் மெஸ், 6 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 310 mm
பின்புறம் டிஸ்க் 270 mm ( ABS)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 120/70-R17 ட்யூப்லெஸ்
பின்புற டயர் 160/60-R17 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V-8Ah MF பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 2090 மிமீ
அகலம் 823 மிமீ
உயரம் 1125 மிமீ
வீல்பேஸ் 1440 மிமீ
இருக்கை உயரம் 780 மிமீ
கிரவுண்ட் கிளியரண்ஸ் 168 மிமீ
எரிபொருள் கொள்ளளவு 11 லிட்டர்
எடை (Kerb) 174 kg

ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 நிறங்கள்

Analog வேரியண்டில் ஸ்மோக், பிளேயா பிளாக் என இரண்டு நிறம், Dash வேரியண்டில் கோல்டு டிப், பிளேயா பிளாக், பிக்ஸ் பிரான்ஸ் என இரண்டு நிறம், Flash வேரியண்டில் ப்ரேவா ப்ளூ மற்றும் மஞ்சள் ரிப்பன் என இரண்டும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஆறு நிறங்களை பெறுகின்றது.

Royal Enfield Guerrilla 450 rivals

400-450சிசி சந்தையில் கிடைக்கின்ற டிரையம்ப் ஸ்பீடு 400, ஹீரோ மேவ்ரிக் 440, மற்றும் ஹார்லி-டேவிட்சன் X440 , ஹஸ்குவர்னா ஸ்வார்ட்பிலேன் 401ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

FAQs Royal Enfield Guerrilla 450

[rank_math_rich_snippet id=”s-66aec5eb-6338-447c-9411-ae00f54a06fa”]

Royal Enfield Guerrilla 450 Image Gallery

last updated – 24/02/2025


Spread the love
Share
Published by
MR.Durai