Skip to content

2024 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

  • by

tvs-raider-bike

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ரைடர் 125 அமோக ஆதரவினை பெற்று 125சிசி என்ஜின் பெற்ற பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

2024 TVS Raider

125சிசி சந்தையில் மிக வேகமான வளர்ச்சி பெற்று வரும் மாடலாக விளங்கும் ரைடர் 125 பைக்கில் ஒற்றை இருக்கை, ஸ்பிளிட் இருக்கை, SX மற்றும் சூப்பர் ஸ்குவாட் எடிசன் என மொத்தமாக 4 வேரியண்டுகள் பெற்று 8 நிறங்களை பெற்றுள்ளது.

ரைடர் பைக்கில் 124.8cc சிங்கிள்-சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் செயல்திறன் 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 5.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

கூடுதலாக, ரைடர் iGo மாடல் 10 % வரை கூடுதலாக பவர் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள எஞ்சின் அதிகபட்சமாக டார்க் சாதாரண மாடலை விட 0.55Nm வரை கூடுதலான டார்க் வெளிப்படுத்துகின்றது. எனவே, 6,000RPM-ல் 11.75 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த வேரியண்டில் நார்டோ கிரே நிறத்துடன் அலாய் வீலில் சிவப்பு நிறம் உள்ளது.

ஒற்றை இருக்கை வேரியண்டிலும் எல்இடி ஹெட்லேம்ப் & டெயில் லைட், பெற்று ஸ்பீடோமீட்டர், டேக்கோமீட்டர், ட்ரிப் மீட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், கடிகாரம், ஃப்யூவல் அளவு மற்றும் ரைடு மோடு ஆகியவற்றை வழங்கும் நெகடிவ் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பெற்றுள்ளது. ஸ்பிளிட் சிட் பெற்ற வேரியண்ட் விலை கூடுதலாகவும், கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை வழங்குகின்ற ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் வேரியண்ட் SX ஆக கிடைக்கின்றது.

சூப்பர் ஹீரோக்களின் ஆடைகளின் அடிப்படையில் இரண்டு வண்ணப்பூச்சுகள் உள்ளன. கருப்பு மற்றும் ஊதா நிறத்தில் சில வெள்ளி பூச்சு மற்றும் பின்புறத்தில் ஒரு கருப்பு பாந்தர் லோகோ உள்ளது. அடுத்து, அயர்ன் மேன் மூலம் ஈர்க்கப்பட்ட வண்ணப்பூச்சு வேலை வெள்ளி நிறத்துடன் சிவப்பு மற்றும் கருப்பு பூச்சு பெறுகிறது.

டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்கு மற்றும் சரிசெய்யக்கூடிய பின்புற மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. 17-இன்ச் அலாய் வீல்கள் கொண்டுள்ள இந்த பைக்கில் 80/100-பிரிவு முன்புற டயரும் மற்றும் 100/90-பிரிவு பின்புற டியூப்லெஸ் டயர் உள்ளது. முன்புற டயரில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் மற்றும் பின்புற டயரில் 130 மிமீ டிரம் இணைக்கபட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை கொடுத்துள்ளது.

2024 டிவிஎஸ் ரைடர் 125 விலை

  • Raider Drum – ₹ 88,807
  • Raider Single Seat – ₹ 99,807
  • Raider Split Seat – ₹ 99,990
  • Raider iGO – ₹ 1,01,190
  • Raider SSE – ₹ 1,04,927
  • Raider SX – ₹ 1,10,007

(EX-showroom TamilNadu)

tvs raider 125cc cluster

2023 டிவிஎஸ் ரைடர் 125 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை ஏர் ஆயில் கூல்டு, 4 stroke
Bore & Stroke 53.5 mm x 55.5 mm
Displacement (cc) 124.8 cc
Compression ratio 10:01
அதிகபட்ச பவர் 11.2 hp (8.37Kw) at 7500 rpm
அதிகபட்ச டார்க் 11.2 Nm  at 6000 rpm/ 11.75 Nm  at 6000 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டைமண்ட் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 5 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 240/ 130 டிரம் mm (SBT)
பின்புறம் 130 mm டிரம்
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 80/100-17M/C 46P ட்யூப்லெஸ்
பின்புற டயர் 100/90-17M/C 55P ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V 4.0Ah MF
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 2070 mm
அகலம் 785 mm
உயரம் 1028 mm
வீல்பேஸ் 1326 mm
இருக்கை உயரம் 780 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 180 mm
எரிபொருள் கொள்ளளவு 10 litres
எடை (Kerb) 123 kg

டிவிஎஸ் ரைடர் பைக் நிறங்கள்

SX வேரியண்டில் மஞ்சள், கருப்பு நிறங்களிலும், Split SEAT மாடலில் மஞ்சள், நீலம், சிவப்பு, மற்றும் கருப்பு, இறுதியாக சிவப்பு, கருப்பு நிறங்களில் ஒற்றை இருக்கை மற்றும் சூப்பர் ஸ்குவாட் எடிசன் உள்ளது.

 

2024 TVS Raider on-Road Price Tamil Nadu

2024 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரிக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Raider Drum – ₹ 1,07,082
  • Raider Single Seat – ₹ 120,110
  • Raider Split Seat – ₹ 120,527
  • Raider iGO – ₹ 122,887
  • Raider SSE – ₹ 1,28,097
  • Raider SX – ₹ 1,34,014

(All Price On-road Tamil Nadu)

  • Raider Drum – ₹ 99,432
  • Raider Single Seat – ₹ 1,11,334
  • Raider Split Seat – ₹ 1,12,527
  • Raider iGO – ₹ 112,621
  • Raider SSE – ₹ 1,16,697
  • Raider SX – ₹ 1,22,014

(All Price On-road Puducherry)

2024 TVS Raider rivals

ஹோண்டா SP125, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், ஹீரோ கிளாமர் 125, பஜாஜ் பல்சர் N125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 பைக்குகளுடன் நேடியாக சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்ற டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் மற்ற போட்டியாளர்களாகவும் ஷைன் 125, சூப்பர் ஸ்பிளெண்டர் 125 மாடல்களும் உள்ளன.

Faqs About TVS Raider bike

டிவிஎஸ் ரைடர் 125 பைக் என்ஜின் விபரம் ?

124.8cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் மூன்று வால்வுகளை பெற்றுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ரைடர் 125 பைக் மைலேஜ் எவ்வளவு ?

ரைடர் 125 பைக்கின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 52 கிமீ முதல் 56 கிமீ வரை கிடைக்கின்றது.

டிவிஎஸ் ரைடர் 125 பைக் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வசதி ?

TFT கன்சோல் ஆனது SmartXonnect உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கிளஸ்ட்டரில் அழைப்புகள், SMS, அறிவிப்புகள், குரல் உதவி மற்றும் பிற புதுப்பிப்புகளுக்கான அணுகலை வழங்குகிறது. முக்கியமாக டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், பயணிக்கும் திசைகளில் அருகிலுள்ள எரிபொருள் நிலையத்தை அடைய உதவுகிறது.

டிவிஎஸ் ரைடர் 125 பைக் ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

2024 டிவிஎஸ் ரைடர் 125 ஆன்-ரோடு விலை ரூ.1.07 லட்சம் முதல் ரூ.1.34 லட்சம் வரை உள்ளது.

டிவிஎஸ் ரைடர் 125 பைக் போட்டியாளர்கள் யார் ?

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், ஹோண்டா SP125, ஹீரோ கிளாமர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 பைக்குகளுடன் நேடியாக சந்தை பகிர்ந்து கொள்ளுகின்ற டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் மற்ற போட்டியாளர்களாகவும் ஷைன் 125, சூப்பர் ஸ்பிளெண்டர் 125 மாடல்களும் உள்ளன.

2024 TVS Raider image gallery