டிவிஎஸ் மோட்டாரின் புதிய ஹைப்பர் ஸ்போரட் ஸ்கூட்டர் என அழைக்கப்படுகின்ற என்டார்க் 150-ல் உள்ள என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
TVS Ntorq 150
குறிப்பாக பிரீமியம் ஸ்டைலை பெற்று 4 புராஜெக்டர் எல்இடி விளக்குடன் மிக ஸ்டைலிஷாக அமைந்து ரேஸ் மற்றும் ஸ்டீரிட் என ரைடிங் மோடினை பெற்று igo அசிஸ்ட், ஸ்டார்ட், ஸ்டாப் வசதியுடன் 3 வால்வு பெற்ற O3C Tech கொண்ட 149.7cc ஏர்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 13.2 Ps @ 7000 rpm-ல் மற்றும் டார்க் 14.2Nm @ 5,500rpm-ல் வெளிப்படுத்தும் நிலையில், சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
0-60 கிமீ வேகத்தை 6.3 வினாடிகளில் எட்டுவதுடன் மணிக்கு அதிகபட்ச வேகம் 104 கிமீ ஆக
- Ntorq 150 STD – ₹ 1,19,000
- Ntorq 150 TFT – ₹ 1,29,000
(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)
TVS Ntorq 150 on-Road Price Tamil Nadu
டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் 150 ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
- Ntorq 150 STD – ₹ 1,43,254
- Ntorq 125 TFT – ₹ 1,54,660
(All Price On-road Tamil Nadu)
- Ntorq 150 STD – ₹ 1,29,654
- Ntorq 125 TFT – ₹ 1,39,961
(All Price on-road Pondicherry)
குறிப்பாக என்டார்க் 150 வசதிகளை பொறுத்த வரை ஏரோடைனமிக்ஸ் விங்கலட்ஸ் வடிவத்தை பெற்று ஹேண்டில் பார் பைக்குகளை போல கொடுக்கப்பட்டு எல்இடி முறையில் 4 புராஜெக்டர் விளக்குகளுடன் அமைந்துள்ளது.
22 லிட்டர் ஸ்டோரேஜ் வசதியுடன் 5 அங்குல TFT கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அலெக்ஸா மற்றும் ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு, நிகழ் நேர இருப்பிடம் அறிதல், விபத்து அலர்ட், OTA மேம்பாடு ஆகியவற்றுடன் பிரேக் அட்ஜெஸ்ட் லிவர் என பலவற்றை பெற்றுள்ளது.
பேஸ் வேரியண்டில் எல்சிடி கிளஸ்ட்டரை கொண்டுள்ள நிலையில் மற்ற அம்சங்களில் இருபக்கத்திலும் 12 அங்குல வீல் பெற்று 100 / 80-12, பின்புறம் 110 / 80-12 முன்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
என்டார்க் 150 வாங்கலாமா ?
பட்ஜெட் விலையில் துவங்குவது மிகப்பெரிய பலமாக என்டார்க் 150க்கு அமைந்திருப்பதுடன், இளைய தலைமுறையினருக்கான டிசைன், கனெக்ட்டிவிட்டி வசதிகள், ஸ்டைலிஷான தோற்ற அமைப்பு, இருக்கை அடியில் சிறப்பான ஸ்டோரேஜ் என பல முக்கிய அம்சங்கள் பெற்றுள்ளது.
ஆனால் போட்டியாளர்களில் லிக்யூடு கூல்டு எஞ்சின் பெற்றிருப்பது இந்த மாடலுக்கு பின்னடைவாக அமைந்திருப்பதுடன் கிக் ஸ்டார்டர் இல்லை, 14 அங்குல வீல் கொடுக்காமல் 12 அங்குல வீல் உள்ளது. சிலருக்கு இந்த டிசைன் மீது பெரிய ஈர்ப்பு இல்லாமல் போக வாய்ப்புள்ளது.
டிவிஎஸ் 125 நுட்பவிரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | – |
Displacement (cc) | 149.7 cc |
Compression ratio | 10.0:1 |
அதிகபட்ச பவர் | 13.2 hp (9.7 Kw) at 7,000 rpm |
அதிகபட்ச டார்க் | 14.2Nm @ 5500rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | அண்டர் போன் |
டிரான்ஸ்மிஷன் | ஆட்டோமேட்டிக் |
கிளட்ச் | டிரை டைப் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | காயில் ஸ்பிரிங் ஹைட்ராலிக் டேம்பர்ஸ் |
பிரேக் | |
முன்புறம் | 220mm டிஸ்க் |
பின்புறம் | டிரம் 130 mm (with SBT) |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 100/80-12 ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 110/80-12 ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V-5Ah MF பேட்டரி |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் |
பரிமாணங்கள் | |
நீளம் | 1861 mm |
அகலம் | 710 mm |
உயரம் | 1120 mm |
வீல்பேஸ் | 1285 mm |
இருக்கை உயரம் | 770mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 155 mm |
எரிபொருள் கொள்ளளவு | 5.8 litres |
எடை (Kerb) | 115 kg |
டிவிஎஸ் என்டார்க் 150 நிறங்கள்
ஸ்டாண்டர்டு வேரியண்டில் ரேசிங் சிவப்பு, ஸ்டீல்த் சில்வர் மற்றும் டர்போ நீலம் , TFT வேரியண்டில் நைட்ரோ பச்சை, ரேசிங் சிவப்பு, மற்றும் டர்போ நீலம் உள்ளது.
2025 TVS Ntorq 150 rivals
குறிப்பாக நேரடி போட்டியாளர் 150சிசியில் இல்லையென்றாலும், ஏப்ரிலியா SR175, லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்ற ஜூம் 160 மற்றும் ஏரோக்ஸ் 155 உள்ளது.
Faqs About TVS Ntorq 150
டிவிஎஸ் என்டார்க் 150 என்ஜின் விபரம் ?
O3C Tech கொண்ட 149.7cc ஏர்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 13.2 Ps @ 7000 rpm-ல் மற்றும் டார்க் 14.2Nm @ 5,500rpm-ல் வெளிப்படுத்தும் நிலையில், சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.
டிவிஎஸ் என்டார்க் 150 மைலேஜ் எவ்வளவு ?
டிவிஎஸ் என்டார்க் 150 மைலேஜ் லிட்டருக்கு 35-36 கிமீ வரை வழங்கலாம்.
2025 TVS Ntorq 150 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?
டிவிஎஸ் என்டார்க் 150யின் ஆன்-ரோடு விலை ரூ.1.44 லட்சம் முதல் ரூ.1.55 லட்சம் வரை ஆகும்.
டிவிஎஸ் என்டார்க் 150 போட்டியாளர்கள் ?
என்டார்க் 150க்கு போட்டியாக ஏப்ரிலியா SR175, லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்ற ஜூம் 160 மற்றும் ஏரோக்ஸ் 155 உள்ளது.