ஃபியட் அபார்த் 595 காம்பெடிஷன் |
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அபார்த் 595 காம்பெடிஷன் வந்துள்ளது. இதற்கு முன்பு 2008ம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட அபார்த் 500 சிறப்பான எண்ணிக்கை பதிவு செய்யாத காரணத்தால் நிறுத்தப்பட்டது.
தோற்றம்
பழமையான தோற்றத்தில் நவீன வசதிகளுடன் விளங்கும் அபார்த் 595 காம்பெடிஷன் காரில் வட்ட வடிவ செனான் முகப்பு விளக்குகளை பெற்றுள்ளது. இரண்டு பட்டைகளுக்கு மத்தியில் அபார்த் ஸ்கார்ப்பியோ லோகோ பதிக்கப்பட்டுள்ளது.
17 இஞ்ச் ஆலாய் வீல் , சிறப்பான ஸ்போர்ட்டிவ் பம்பர்கள் , ரியர் ஸ்பாய்லர் என கிளாசிக் தோற்றத்தில் அபார்த் 595 காம்பெடிஷன் விளங்குகின்றது. சாம்பல், கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை என மொத்தம் 4 வண்ணங்களில் கிடைக்கும்
உட்புறம்
ஸ்டீயரிங் வீலில் பல பயன் பொத்தான்கள் , 7 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , மெனுவல் ஏசி கட்டுப்பாடு , பார்க்கிங் சென்சார் போன்ற வசதிகளை பெற்றுள்ளது.
ஃபியட் அபார்த் 595 காம்பெடிஷன் |
உட்புறத்தில் கருப்பு மற்றும் சிகப்பு நிறத்திற்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கருப்பு வண்ண லெதர் ஃபினிஷிங், ஃபேப்ரிக் அப்ஹோல்சரி என இன்டிரியரிலும் ஸ்போர்ட்டிவ் தோற்றத்தை பெற்றுள்ளது.
என்ஜின்
160எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் ஃபியட் டி-ஜெட் பெட்ரோல் என்ஜின் பொருத்தியுள்ளனர் . இதன் டார்க் 230என்எம் ஆகும். 5 வேக தானியங்கி கியர்பாக்ஸ் மற்றும் பேடல் ஷிஃபட்டரை பெற்றுள்ளது.
0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 7.4 விநாடிகளை எடுத்துக்கொள்ளும். ஃபியட் அபார்த் 595 காம்பெடிஷன் காரின் வேகம் மணிக்கு 210கிமீ ஆகும். டிரைவ் (D) மற்றும் ஸ்போர்ட் (S) என இரண்டு விதமான டிரைவ் ஆப்ஷனை கொண்டுள்ளது.
போட்டியாளர்கள்
பிஎம்டபிள்யூ மினி கூப்பர் எஸ் மற்றும் வரவிருக்கும் ஃபோக்ஸ்வேகன் பீட்டல் போன்ற கார்களுக்கு சவாலை ஃபியட் அபார்த் 595 காம்பெடிஷன் கொடுக்கும்.
ஃபியட் அபார்த் 595 காம்பெடிஷன் காரின் விலை ரூ.29.85 லட்சம் (ex-showroom, Delhi)
சென்னை, டெல்லி , மும்பை , பெங்களூரு மற்றும் கொல்கத்தா என 5 நகரங்களில் மட்டும் முதற்கட்டமாக விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் நந்தனம் ஆர்டிசி ஃபியட் ஆகும்.
Fiat Abarth 595 Competizione launched in India