ஃபியட் அர்பன் க்ராஸ் விற்பனைக்கு வந்தது

ஃபியட் நிறுவனத்தின் ஃபியட் அர்பன் க்ராஸ் க்ராஸ்ஓவர் கார் மாடல் ரூ.7.85 லட்சத்திலான தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 142 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும்  டி-ஜெட் என்ஜினும் சேர்க்கப்பட்டுள்ளது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வந்த ஃபியட் அர்பன் க்ராஸ் மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் கிடைக்கும். டாப் வேரியண்டான அர்பன் க்ராஸ் எமோஷன் வேரியண்டில் 142 hp பவருடன் 210 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டி-ஜெட் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது. இது அபாரத் மாடலாகும்.

ஏக்டிவ் மற்றும் டைனமிக் வேரியண்டில் 93 hp பவருடன் 209 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்ஜின் பெற்று இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது.

அவென்ச்சூரா க்ராஸ் மாடலை போலவே முகப்பில் பம்பர் 205 மிமீ கிரவுண்டு கிளியரனஸ் பெற்றிருந்தாலும் துனை  உதவி சக்கரம் பூட்டுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளது. இன்டிரியரில் ஃபியட் ஸ்மார்ட்டெக்  5.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் , பூளூடூத் தொடர்புகள் , நேவிகேஷன் 16 இன்ச் ஸ்கார்ப்பியன் அலாய் வீல் , கருப்பு நிறத்திலான இன்டிரியர் பெற்றுள்ளது , ட்யூயல் ஏர்பேக் , ஏபிஎஸ்,இபிடி என அனைத்தும் மூன்று வேரியண்டிலும் கிடைக்கும்.

ஃபியட் அர்பன் க்ராஸ் விலை பட்டியல்

  •  93hp மல்டிஜெட்  Active: ரூ. 6.85 லட்சம்
  • 93hp மல்டிஜெட் Dynamic: ரூ. 7.45 லட்சம்
  • 142hp T-Jet Emotion: ரூ. 9.85 லட்சம்

( அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )

Share