வென்ட்டோ ஹைலைன் ப்ளஸ் சிறப்பு வேரியண்டில் கூடுதல் துனைகருவிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 1.2 லிட்டர் என்ஜின் ஆப்ஷனில் இல்லை .
104பிஎச்பி 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 103பிஎச்பி ஆற்றலை தரவல்ல 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டும் வந்துள்ள இந்த வேரியண்டில் மெனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே உள்ளது.
ஹைலைன் ப்ளஸ் வேரியண்டில் புதிய மல்டிமீடியா நேவிகேஷன் அமைப்பு , கருப்பு நிற ஃபினிஷ் மேற்கூரை , ஓஆர்விஎம் கவர் , ஸ்க்ஃப் பிளேட் , பாடி மோல்டிங் மற்றும் புதிய மிதியடிகள் போன்றவற்றை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ வசதிகள் |
ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் அனைத்து வேரியண்டிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் நிரந்தர அம்சமாக இருக்கின்றது. வென்ட்டோ காரின் போட்டியாளர்கள் சிட்டி , சியாஸ் , ரேபிட் , வெர்னா , சன்னி மற்றும் ஸ்கேலா ஆகும்.
ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஹைலைன் ப்ளஸ் வேரியன்ட் விலை
1.5 லிட்டர் டீசல் :ரூ.9.70 லட்சம்
1.6 லிட்டர் பெட்ரோல் :ரூ.10.98 லட்சம்
(மும்பை எக்ஸ்ஷோரூம் விலை)
VW Vento Highline Plus edition launched