இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கினை அடிப்படையாக கொண்ட அட்வென்ச்சர் மாடலான டி-மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக் விலை ரூ.12.49 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கப்பட்ட்டுள்ள நிலையில் டெலிவரி ஜூலை 2016 முதல் தொடங்கும்.
டி மேக்ஸ் வி க்ராஸ் பிக்அப் டிரக் விற்பனையில் உள்ள செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி காரின் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட மாடலாகும். 134 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 320Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் வழியாக 4 வீல்களுக்கும் ஆற்றலை கடத்துகின்றது.
பிரிமியம் இன்டிரியரினை கொண்டுள்ள வி க்ராஸ் மாடலில் 7.0 இஞ்ச் தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , டில்ட் ஸ்டீயரிங் போன்றவற்றை பெற்றுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ் இபிடி , பிரேக் அசிஸ்ட் மற்றும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் போன்றவற்றை பெற்றுள்ளது.
எஸ்யூவி பிரியர்களுக்கு மாற்றான பிக்கப் டிரக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ள வி க்ராஸ் காரில் பல நவீன அம்சங்களுடன் ஆல் வில் டிரைவ் ஆப்ஷினை பெற்றுள்ளது. 16 இஞ்ச் அலாய் வீலுடன் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் டிரம் பிரேக்கினை பெற்றுள்ளது.
அட்வெனச்சருக்கு ஏற்ற சாகசமான இசுசூ டி-மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக் விலை ரூ.14.29 லட்சம் ( எக்ஸ்ஷோரூம் சென்னை ).