வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள ஆஸ்டர் எஸ்யூவி காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள இசட்எஸ் இவி காரின் அடிப்படையிலான பெட்ரோல் வெர்ஷன் மாடலாக ஆஸ்டர் விளங்குகின்றது.

ஆஸ்டர் எஸ்யூவி சிறப்புகள்

ஆஸ்டரில் 110 ஹெச்பி பவர் மற்றும் 150 என்எம், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும், சக்திவாய்ந்த 140 ஹெச்பி பவர் மற்றும் 220 என்எம், 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் 6 வேக  ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

காரின் இன்டிரியரில் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஸ்டெப் டாஷ், பிரஷ் செய்யப்பட்ட மெட்டல் எஸ்க்யூ அலங்கார டிரிம் டாஷ்போர்டு மற்றும் கதவு பேனல்கள் மற்றும் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி உடன் 3 விதமான டேஸ்போர்ட் தீமை பெற்று டூயல் டோனில் சாங்ரியா ரெட், ஐகானிக் ஐவரி மற்றும் டக்ஸிடோ பிளாக் ஆகியவற்றை பெற்றுள்ளது.

இந்த காரில் நவீனத்துவமான Level-2 ADAS (Advanced Driver Assistance Systems) சிஸ்டத்தை அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம்ஸ் பிரிவில் நெடுந்தொலைவு பயணத்தில் உதவுகின்ற ஆடாப்ட்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், அல்ட்ராசோனிக் சென்சாரின் உதவியுடன் செயல்படும் தானியங்கி பார்க்கிங் அசிஸ்ட், முன்புற மோதலை தடுக்கம் வசதி, ஆட்டோமேட்டிக் அவசர பிரேக்கிங் வசதி, பிளைன்ட் ஸ்பாட் அறிதல் மற்றும் லேன் மாறுவதனை கேமரா உதவியுடன் எச்சரிக்கும் லேன் வார்னிங் வசதியும் உள்ளது.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற கிரெட்டா, செல்டோஸ், கிக்ஸ், டஸ்ட்டர் மற்றும் குஷாக் உள்ளிட்ட எஸ்யூவி கார்களை எதிர்கொள்ளும் வகையில் ஆஸ்டரை எம்ஜி மோட்டார் கொண்டு வந்துள்ளது.