டட்சன் கோ , கோ பிளஸ் ஆனிவர்சரி எடிசன் அறிமுகம்

டட்சன் பிராண்டின் மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் கூடுதல் வசதிகளை பெற்ற டட்சன் கோ மற்றும் டட்சன் கோ பிளஸ் கார்களில் சிறப்பு பதிப்பு மாடல்கள் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 டட்சன் கார்

கோ மற்றும் கோ பிளஸ் கார்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு வருடாந்திர கொண்டாட்ட பதிப்பில் எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.

இரு கார் மாடல்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 68 எச்பி ஆற்றலையும், 104 என்எம் டார்கையும் வெளிப்படுத்துகின்றது. 5 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர். கோ ப்ளஸ் காரின் மைலேஜ் லிட்டருக்கு 20.6 கிமீ ஆகும்.

டாப் வேரியன்டான T(O) மாடலில் கூடுதல் வசதிகளாக பாடி ஸ்டிக்கரிங், ஆனிவர்சரி எடிசன் பதிப்பு, மற்றும் கருப்பு நிற ஸ்பாய்லர் போன்றவை வெளிதோற்றத்தில் பெற்றுள்ளது. இன்டிரியரில் நீல வண்ணத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கபட்டு இருக்கை , டேஸ்போர்டு போன்றவற்றில் நீல நிறம் சேர்க்கப்பட்டிருப்பதுடன் ,   ஆனிவர்சரி கால் மிதியடிகள், லெதர் இருக்கைகள், கீலெஸ் உள்நுழைவு வசதி, ப்ளூடைத் ஆதரவு, சென்டரல் லாக்கிங் , முழு வீல் கவர், ரியர் பார்க்கிங் சென்சார், ரேடியோ மற்றும் யூஎஸ்பி  போன்ற பல வசதிகளை கொண்டதாக உள்ளது.

ஸ்பெஷல் மாடல்கள் மற்றும் மூன்று ஆண்டு நிறைவு குறித்து நிசான் இந்தியா பிரிவு நிர்வாக இயக்குநர் அருன் மல்கோத்ரா கருத்து தெரிவிக்கையில் வாகன சந்தையில் டட்சன் பிராண்டு மிக சிறப்பான வெற்றியை தொடர்ந்து பதிவு செய்து வருவதுடன் மூன்று ஆண்டுகள் நிறைவை ஒட்டி வாடிக்கையாளர்களுக்கும் , டட்சன் அணிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

டட்சன்  சிறப்பு பதிப்பு விலை பட்டியல்

Exit mobile version