Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய செடான் கார்கள் – 2017

by MR.Durai
1 January 2017, 8:22 pm
in Car News
0
ShareTweetSend

இந்திய சந்தையில் 2017ல் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார் மாடல்களில் செடான் ரகத்தில் வரவுள்ள புது மாடல்களை செடான் கார்கள் 2017 தொகுப்பில் அறிந்து கொள்ளலாம். ஹேட்ச்பேக் ரகத்தில் கூடுலாக  பூட்டினை பெற்ற மாடல்களை செடான் அல்லது சலூன் கார்கள் என குறிப்பிடுவர்.

1. செவர்லே எசென்சியா

செவர்லே நிறுவனம் இந்தியாவில் இந்த வருடத்தில் 2 புதிய மாடல்கள் மற்றும் 2 மேம்படுத்தப்பட்ட மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ள மாடல்களில் எசென்சியா செடானும் அடக்கம். 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிக்கு வந்த எசென்சியா மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினை பெற்ற மேக் இன் இந்தியா மாடலாகும்.

  • வருகை – மார்ச் 2017
  • விலை – ரூ. 5.50 லட்சம் ஆரம்பம்
  • என்ஜின் – 1.0 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல்
  • கியர்பாக்ஸ் – 5 வேக மேனுவல்
  • போட்டியாளர்கள் – எமியோ , டிசையர்  , எக்ஸ்சென்ட்  , கைட் 5 , அமேஸ், எட்டியோஸ்

2. டாடா கைட் 5

மாபெரும் வெற்றி பெற்ற டியாகோ காரை அடிப்படையாக கொண்ட கைட் 5 செடான் கார் உற்பத்தி நிலையை எட்டியுள்ள நிலையில் வருகின்ற பிப்ரவரி மாதம் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் டியாகோ போலவே ரெவோட்ரான் மற்றும் ரெவோடார்க் என்ஜினை பெற்றிருக்கும். ஆனால் போட்டியாளர்களை விட குறைவான விலையில் அமைந்திருக்கும்.

  • வருகை – மார்ச் 2017
  • விலை – ரூ. 4.80 லட்சம் ஆரம்பம்
  • என்ஜின் – 1.0 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல்
  • கியர்பாக்ஸ் – 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி
  • போட்டியாளர்கள் – எமியோ , டிசையர்  , எக்ஸ்சென்ட்  , எசென்சியா  , அமேஸ் , எட்டியோஸ்

3. 2017 மாருதி டிசையர்

வருகின்ற மார்ச் மாத மத்தியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ஸ்விஃப்ட் காரின் டிசையர் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் வரவுள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற செடான் ரக மாடலாக மாருதி டிசையர் விளங்குகின்றது. புதிய மாருதி ஸ்விஃப்ட் காரை அடிப்படையாக அமைந்திருக்கும்.

  • வருகை – மார்ச் 2017
  • விலை – ரூ. 5.70 லட்சம் ஆரம்பம்
  • என்ஜின் – 1.3 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல்
  • கியர்பாக்ஸ் – 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி
  • போட்டியாளர்கள் – எமியோ , எசென்சியா  , எக்ஸ்சென்ட்  , கைட் 5 , அமேஸ் , எட்டியோஸ்

4. புதிய ஹோண்டா சிட்டி

சமீபத்தில் தாய்லாந்தில் விற்பனைக்கு செல்ல உள்ள ஹோண்டா சிட்டி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய மாடலில் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளை பெற்றிருக்கும்.

  • வருகை – ஜனவரி – பிப்ரவரி 2017
  • விலை – ரூ. 7.90 லட்சம் ஆரம்பம்
  • என்ஜின் – 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல்
  • கியர்பாக்ஸ் – 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி
  • போட்டியாளர்கள் – சியாஸ் , வெர்னா , வயோஸ்

5. டொயோட்டா வயோஸ்

இந்திய சந்தையில் மிகுந்த எதிர்பார்க்கும் மாடல்களில் ஒன்றான டொயோட்டா வயோஸ் காரனது எட்டியோஸ் மற்றும் கரோல்லா அல்டிஸ் காருக்கு இடையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. வயோஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜினை பெற்றிருக்கும்.

  • வருகை – ஆகஸ்ட் 2017
  • விலை – ரூ. 8.50 லட்சம் ஆரம்பம்
  • என்ஜின் – 1.4 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல்
  • கியர்பாக்ஸ் – 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக்
  • போட்டியாளர்கள் – சிட்டி ,சியாஸ் ,வெர்னா , வென்டோ

6. புதிய ஹூண்டாய் வெர்னா

வெர்னா காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் புதிய ஃபூளூடியக் 2.0 டிசைன் தாத்பரியங்களை அடிப்படையாக கொண்டதாக அமைந்திருக்கும் மேலும் மைல்ட் ஹைபிரிட் ஆப்ஷனை பெற்றிருக்கலாம்.

  • வருகை – மார்ச் 2017
  • விலை – ரூ. 8.30 லட்சம் ஆரம்பம்
  • என்ஜின் – 1.4 லிட்டர்  1.6 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் , 1.6 லிட்டர் பெட்ரோல்
  • கியர்பாக்ஸ் – 5 வேக மேனுவல் மற்றும் எம்டி
  • போட்டியாளர்கள் – சிட்டி , சியாஸ் , வயோஸ் , வென்ட்டோ
7. புதிய செவர்லே க்ரூஸ்

மேம்படுத்தப்பட்ட செவர்லே க்ரூஸ் செடான் மாடல் இந்தியாவில் இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது. பல்வேறு விதமான நவீன வசதிகளை பெற்ற மாடலாக வரவுள்ள புதிய க்ரூஸ் காரில் குறிப்பாக  7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்றவற்றின் ஆதரவினை கொண்டதாக இருக்கும்.

  • வருகை – அக்டோபர் 2017
  • விலை – ரூ. 12.50 லட்சம் ஆரம்பம்
  • என்ஜின் – 1.4 லிட்டர் டீசல் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல்
  • கியர்பாக்ஸ் – 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக்
  • போட்டியாளர்கள் – கரோல்லா அல்டிஸ் , எலன்ட்ரா , ஜெட்டா , ஆக்டாவியா

8. புதிய டொயோட்டா கரோல்லா அல்டிஸ்

150க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா கரோல்லா அல்டிஸ் காரில் தோற்ற மாற்றங்களுடன் விற்பனையில் உள்ள அதே என்ஜின் ஆப்ஷனை கொண்டதாக கிடைக்க உள்ளது. முழு எல்இடி ஹெட்லேம்ப் , 7.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மேலும் பல வசதிகளை கொண்டதாக இருக்கும்.

  • வருகை – ஜூலை 2017
  • விலை – ரூ. 14 லட்சம் ஆரம்பம்
  • என்ஜின் – 1.4 லிட்டர் டீசல் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல்
  • கியர்பாக்ஸ் – 6 வேக மேனுவல் மற்றும் சிவிடி
  • போட்டியாளர்கள் – ஆக்டாவியா ,  எலன்ட்ரா , க்ரூஸ் , ஜெட்டா

 

Related Motor News

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

கருப்பு நிறத்தில் நிசானின் மேக்னைட் குரோ விற்பனைக்கு வெளியானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.!

2026 எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது.!

டாடாவின் சியரா எஸ்யூவி முழு விலைப் பட்டியல் வெளியானது.!

இந்தியாவில் மினி கூப்பர் S Convertible விலை ரூ. 58.50 லட்சம்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan